முன்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்கள வீரர் என்பவர் காற்பந்துச் சங்கத்தின் ஒரு விளையாடும் நிலை. இவர்கள் எதிரணியில் கோல் எல்லைக்கு அருகில் நின்று விளையாடுவதால் இந்தப் பெயர் காரணமாக அமைந்தது. இந்த நிலையில் விளையாடும் வீரர்களுக்குத் தான் தனது அணிக்கு கோல் அடிப்பதற்கான பொறுப்பும் மற்றும் வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. முன்கள வீரர்களுக்கு தாக்குதல் ஆட்டம் மட்டுமே தலையாய கடமையாக உள்ளது. இவர்களால் தடுப்பாட்டம் ஆட இயலாது.