பேச்சு:கேட்புலத்தொகுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிலத்தில் Ear மற்றும் Auditory system என இரு தனித்தனிக் கட்டுரைகள் உள்ளன. முதலாவது செவிப் புலன் பற்றியும் இரண்டாவது செவிப்புலனைத் தொடர்ந்து தொடர்புள்ள மூளைப் பகுதிகளையும் விவரிக்கிறது. தனித்தனிக் கட்டரைகளாக வளர்த்தெடுத்தல் நலம்.--மணியன் (பேச்சு) 16:10, 9 மே 2012 (UTC) ....தொடர்ச்சியாக தலைப்பை கேட்பு உணர்வுத் தொகுதி என்று மாற்றலாமா ?--மணியன் (பேச்சு) 01:26, 10 மே 2012 (UTC)[பதிலளி]

செவி என்று ஒரு கட்டுரை உள்ளது. இந்தக் கட்டுரையை மணியன் கூறியுள்ளபடி கேட்பு உணவுர்த் தொகுதி என்றோ, அல்லது கேட்டல் உணர்வுத் தொகுதி என்றோ மாற்றலாம். கருத்துக்கள் தேவை.@Mayooranathan, Kanags, செல்வா, and உலோ.செந்தமிழ்க்கோதை: --கலை (பேச்சு) 16:15, 25 செப்டம்பர் 2017 (UTC)

கேள்விப்புலன் தொகுதி அல்லது ஒலியுணர்வுத் தொகுதி எனக் கூறலாம். தொகுதிக்கு மருத்துவர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் மண்டலம் எனும் சொல்லையும் ஆளலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 16:22, 25 செப்டம்பர் 2017 (UTC)

செவி என்று முதற்கட்டுரையையும், கேட்புலத் தொகுதி (Auditory system) என இரண்டாவது கட்டுரையையும் எழுதலாம்.--செல்வா (பேச்சு) 20:32, 25 செப்டம்பர் 2017 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 23:56, 25 செப்டம்பர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கேட்புலத்தொகுதி&oldid=2433090" இலிருந்து மீள்விக்கப்பட்டது