முனீஸ்வரநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனீஸ்வரநாதர்
முனீஸ்வரநாதர்
அதிபதி20வது சமணத் தீர்த்தங்கரர்

முனீஸ்வரநாதர் (Munisuvrata), சமண சமயத்தின் 20வது தீர்த்தங்கரர் ஆவார். [1] முனீஸ்வரநாதர், கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷர் நிலையை அடைந்தவர். முனீஸ்வரநாதரின் காலத்தில் சைன ராமாயணம் படைக்கப்பட்டதாக கருதுகிறார்கள்.[2] இவரது குரு மல்லிநாதர் ஆவார்.

மன்னர் சுமித்திரருக்கும் - இராணி பத்மாவதிக்கும் பிறந்த முனீஸ்வரநாதர்[3] இவர் 30,000 ஆண்டுகள் வாழ்ந்து சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[4]

முனீஸ்வரநாதர் குறித்த வரலாற்று ஆதாரங்கள் இல்லை எனிலும், சமண சமய சாத்திரங்களின் படி, இவரது நிறம் கருமை, வாகனம் ஆமை, பரிவார யட்சினி பகுரூபினி ஆவார். இவரது மார்பில் உள்ள மச்சத்தின் பெயர் வருணன் என்பர்.[5]

கோயில்கள்[தொகு]

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Tukol 1980, ப. 31.
  2. Zvelebil 1992, ப. 65.
  3. "Lord Munisuvrata - Main Events of Life", e-jainism, archived from the original on 2013-02-27, பார்க்கப்பட்ட நாள் 2017-10-22
  4. "முனீஸ்வரநாதர்". Archived from the original on 2013-02-27. பார்க்கப்பட்ட நாள் 2017-10-22.
  5. "Munisuvrata". Archived from the original on 2017-10-08. பார்க்கப்பட்ட நாள் 2017-10-22.
  6. Sandhya, C D’Souza (19 November 2010), "Chaturmukha Basadi: Four doors to divinity Last updated", Deccan Herald

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முனீஸ்வரநாதர்&oldid=3631643" இலிருந்து மீள்விக்கப்பட்டது