பொரிப்புள்ளி ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொரிப்புள்ளி ஆந்தை
பொரிப்புள்ளி ஆந்தை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. ocellata
இருசொற் பெயரீடு
Strix ocellata
(லெசன், 1839)
வேறு பெயர்கள்

Syrnium ocellatum
Bulaca ocellata

பொரிப்புள்ளி ஆந்தை அல்லது மச்ச மர ஆந்தை (Mottled Wood- Owl, அறிவியல் பெயர்: Strix ocellata) என்பது இந்தியாவில் காணப்படும் பெரிய ஆந்தை சிற்றினமாகும். இவை தோட்டங்கள் மற்றும் வறண்ட முள் காடுகள் அல்லது விவசாய நிலங்களை ஒட்டிய இலையுதிர் காடுகளில் காணப்படுகின்றன. விடியற்காலை மற்றும் சாயங்கால வேளைகளில் இவை தனித்துவமான ஓசையினை எழுப்பும். இத்தகைய அழைப்புகளால் இவை எளிதில் கண்டறியப்படுகின்றன. இவற்றின் தலையில் கொம்பு போன்ற குஞ்சங்கள் இல்லாமை மற்றும் முகத்தில் உள்ள செறிவான சிறு கோடுகள் ஆகியவை இவற்றை அடையாளம் காண்பதை எளிதாக்குகின்றன.

விளக்கம்[தொகு]

இந்த பெரிய ஆந்தைக்கு கொம்புகள் போன்று தோற்றம் தரும் காதுத் தூவிகள் இல்லை. முக வட்டம் வெண்மையாக கறுப்பு கோடுகளுடன் காணப்படும். ஆண் பெண் பறவைகளுக்கு இடையே பெரியதாக வேறுபாடு இல்லை. கன்னம் வெள்ளையாக இருக்கும்.[2] விழி இமைகள் ஆரஞ்சு நிறத்திலும், விழிப்படலம் அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும்.[3] வால் பழுப்பு நிறத்திலும் கறுப்பு நிற வரிகள் காணப்படும்.[4]

பொரிப்புள்ளி ஆந்தையில் மூன்று கிளையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் வாழிட எல்லையில் கூர்மையான வரையறைகள் இல்லை.[2]

  • தெற்கு பொரிப்புள்ளி ஆந்தை S. o. ocellata (Lesson, 1839) தென்னிந்தியாவில் காணப்படுகிறது மற்றும் கிராண்டிசை (grandis) விட ஆண் பறவைகள் (333–338 மிமீ) நீளம் கொண்ட சிறிய இறக்கைகள் கொண்டது.
  • S. o. grisescens (Koelz, 1950) வட இந்தியாவில் இமயமலைக்கு தெற்கிலும், மேற்கில் பாக்கித்தானிலும், கிழக்கே பீகாரிலும் காணப்படுகிறது. மேலே உள்ள அடையாளங்கள் வெளிறி இருக்கும் மேலும் ஆண் பறவைகளின் இறக்கை நீளம் 338-346 மி.மீ இருக்கும்
  • S. o. grandis (Koelz, 1950) குஜராத்தில் காணப்படுகிறது. ஆண்களின் இறக்கையின் நீளம் (360–372 மிமீ) உள்ளது.

பரவலும் வாழிடமும்[தொகு]

இந்த இனங்கள் அடர்த்தியற்ற மரங்கள் நிற்கும் காடுகள், மாந்தோப்புகள், பெரிய புளியமரங்கள் நிற்கும் தோப்புகள் ஆகியவற்றில் ஊர்ப்புறங்களைச் சார்ந்து திரியும் பகலில் இணையாக மரங்களில் பதுங்கி இருந்து இரவில் வெளிப்பட்டு எலி, சுண்டெலி, பறவைகள், ஓணான், நண்டு ஆகியவைகளை இரையாகத் தேடித்தின்னும்.[3] பகலில் தொந்தரவு ஏற்பட்டால், சூரிய ஒளியினைப் பொருட்படுத்தாது தூரமாகப் பறந்து சென்று வேறொரு மரத்தில் அமரும்.[5]

இனப்பெருக்கம்[தொகு]

இனப்பெருக்கப் பருவத்தில் ஹீரட் ட்யுஹீ என மறைவிடத்திலிருந்து வெளிப்படும் முன் குரல் கொடுக்கும் பிற ஆந்தை இனத்தைப் போல மரங்களின் புறக்கிளைகளில் அமராது உயர இலைதழைகளிடையே மறைவாக அமரும் பழக்கம் கொண்டது. ஜனவரி முதல் மார்ச் முடிய மரப்பொந்துகளிலும் பாறை இடுக்குகளிலும் சில குச்சிகள் இறகுகள் ஆகியவற்றை வைத்து இரண்டு முட்டைகள் இடும்.[6]

கேரளத்தில் பொரிப்புள்ளி ஆந்தை

கலாச்சாரத் தொடர்பு[தொகு]

பொரிப்புள்ளி ஆந்தையின் வினோதமான அழைப்பு கேரளாவின் சில பகுதிகளில் தீய சகுனத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்த அழைப்பு போவா-ஆ (மலையாளத்தில் போகலாம்) என விளக்கப்படுகிறது. இது ஆவி உலகத்திற்கான ஒரு அழைப்பாக கருதப்படுகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Strix ocellata". IUCN Red List of Threatened Species 2016: e.T22689066A93216851. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22689066A93216851.en. https://www.iucnredlist.org/species/22689066/93216851. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. 2.0 2.1 Ali, S; SD Ripley (1981). Handbook of the Birds of India and Pakistan. Volume 3 (2nd ). பக். 304–307. 
  3. 3.0 3.1 Blanford WT (1895). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Volume 3. Taylor and Francis, London. பக். 277–278. https://archive.org/stream/birdsindia03oaterich#page/277/mode/1up. 
  4. Baker, ECS (1927). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Volume 4 (2nd ). Taylor and Francis, London. பக். 402–403. https://archive.org/stream/BakerFbiBirds4/BakerFBI4#page/n435/mode/1up. 
  5. Rasmussen PC; JC Anderton (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2. Smithsonian Institution and Lynx Edicions. பக். 242. 
  6. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:77
  7. Vijayaraghavan, B (1986). "Owl beliefs". Newsletter for Birdwatchers 38 (3): 54–55. https://archive.org/stream/NLBW38_3#page/n15/mode/1up. 

வெளி இணப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Strix ocellata
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொரிப்புள்ளி_ஆந்தை&oldid=3783970" இலிருந்து மீள்விக்கப்பட்டது