சிறிய தவிட்டுப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Laughing dove
S. s. cambayensis
At Zighy Bay in the Musandam Peninsula, ஓமான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. senegalensis
இருசொற் பெயரீடு
Spilopelia senegalensis
(Linnaeus, 1766)
வேறு பெயர்கள்
  • Streptopelia senegalensis
  • Stigmatopelia senegalensis

பெயர்கள்[தொகு]

சிறிய தவிட்டுப் புறா பெண்

தமிழில்  :சிறிய தவிட்டுப் புறா சிரிக்கும் புறா

ஆங்கிலப்பெயர்  :Little Brown Dove

அறிவியல் பெயர் :Streptopelia senegalensis [2]

உடலமைப்பு[தொகு]

27 செ.மீ. - வெளிர் சிவப்புத் தோய்ந்த பழுப்பும், சாம்பல் நிறமான உடலைக் கொண்டது. கழுத்தின் பக்கங்களில் கருப்பும் செம்பழுப்புமான கட்ட அமைப்புக் கொண்டது. மார்பு இளஞ் சிவப்புத் தோய்ந்த பழுப்பாகவும், வயிறு வெண்மையாகவும் இருக்கும்.

காணப்படும் பகுதிகள்[தொகு]

தமிழகமெங்கும் திருகுகள்ளி, சப்பாத்திக்கள்ளி ஆகியன வேலியாகவும் புதராகவும் வளர்ந்திருக்கும் விவசாய நிலங்களைச் சார்ந்து பிற புறாக்களோடு சேர்ந்து திரியும்.

உணவு[தொகு]

அறுவடையான நிலங்களில் தானியங்களையும் புல் பூண்டின் விதைகளையும் இளந்தளிர்களையும் உணவாகத் தேடித் தின்னும் கூரூரூ.. கூரூஉஉ என்றோ குரு ரூ ரூ என்றோ குரல் கொடுக்கும்.

இனப்பெருக்கம்[தொகு]

ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்வது உண்டெனினும் சிறப்பான பருவம் ஜனவரி முதல் அக்டோபர் வரை கள்ளிப்புதர்களில் குச்சிகள், இலைதடைகளைக் கொண்டு தட்டமைப்பில் கூடு வைத்து 2 முட்டைகள் இடும்.

[3]

சிறிய தவிட்டுப் புறாவின் கூடு&முட்டைகள்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. வார்ப்புரு:IUCN2015.4
  2. "Little Brown Dove சிறிய தவிட்டுப் புறா ". பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:62
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_தவிட்டுப்_புறா&oldid=3929902" இலிருந்து மீள்விக்கப்பட்டது