ஜெஜீன் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெஜீன் கான் சிதேபாலா
யுவானின் யிங்சோங் பேரரசர்
மங்கோலியப் பேரரசின் 9வது ககான்
(பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே)
யுவான் வம்சத்தின் 5வது பேரரசர்
சீனாவின் பேரரசர்
யுவான் வம்சத்தின் பேரரசர்
ஆட்சிக்காலம்ஏப்ரல் 19, 1320 – செப்டம்பர் 4, 1323
முடிசூட்டுதல்ஏப்ரல் 19, 1320
முன்னையவர்புயந்து கான்
பின்னையவர்யெசுன் தெமுர் (யுவான் வம்சம்)
பிறப்புபிப்ரவரி 22, 1302
இறப்புசெப்டம்பர் 4, 1323(1323-09-04) (அகவை 21)
நன்-போ
மனைவிசுகபாலா
பெயர்கள்
மொங்கோலியம்: ᠭᠡᠭᠡᠭᠡᠨ ᠬᠠᠭᠠᠨ ᠰᠢᠳᠡᠪᠠᠯᠠ
சீனம்: 硕德八剌
சிதேபாலா ஜெஜீன் கான்
முழுப் பெயர்
சகாப்த காலங்கள்
சிசி (至治) 1321–1323
மறைவுக்குப் பிந்தைய பெயர்
பேரரசர் ருயிசெங் வென்ஜியாவோ (睿聖文孝皇帝)
கோயில் பெயர்
யிங்சோங் (英宗)
மரபுபோர்ஜிஜின்
அரசமரபுயுவான்
தந்தைபுயந்து கான்
தாய்கொங்கிராட்டின் ரத்னசிறி

ஜெஜீன் கான் (மொங்கோலியம்: Шидэбал Гэгээн хаан, சிதேபால் கெகெகென் கயன்), பிறப்புப் பெயர் சிதிபாலா, யிங்சோங் (யுவானின் பேரரசர் யிங்சோங், சீனம்: 元英宗, பிப்ரவரி 22, 1302 – செப்டம்பர் 4, 1323) என்ற கோயில் பெயராலும் அழைக்கப்படும் இவர், யுவான் வம்சத்தின் பேரரசராக ஆட்சி புரிய புயந்து கானின் பின்வந்தவர் ஆவார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலிய பேரரசு அல்லது மங்கோலியர்களின் 9ஆவது மாபெரும் கான் ஆகக் கருதப்படுகிறார், இருப்பினும் பேரரசின் பிரிவின் காரணமாகப் பெயரளவில் மட்டுமே இப்பெயர் அவருக்கு இருந்தது. இவருடைய பெயருக்கு மங்கோலிய மொழியில் "அறிவொளி / பிரகாசமான கான்" என்று பொருளாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெஜீன்_கான்&oldid=3603133" இலிருந்து மீள்விக்கப்பட்டது