பேச்சு:பார்வைக் குறைபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்வைக் குறைபாடு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

கட்டுரை இணைப்பு[தொகு]

த.வி. யில் பார்வைக் குறைபாடு, குருட்டுத் தன்மை என்ற இரு கட்டுரைகள் உள்ளன. பார்வைக் குறைபாடு கட்டுரை ஆ.வி. யில் Visual impairment கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. குருட்டுத் தன்மை கட்டுரை ஆ.வி. யில் இணைப்புக் கொடுக்கப்படவில்லை. ஆ.வி. யில் Blindness என்று தேடினால், அந்தக் கட்டுரை பார்வைக்குறைபாடு கட்டுரைக்கு வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. த.வி. யில் இவ்விரு கட்டுரைகளையும் இணைத்துவிட்டு, பொருத்தமான தலைப்பைத் தெரிவு செய்யலாம். பார்வைக்குறைபாடு கட்டுரையையே தலைப்பாகக் கொள்ளலாம் என நினைக்கிறேன். அவ்வாறு இணைக்காமல், குருட்டுத் தன்மை என்பதை முழுமையான பார்வை இழப்பு எனக்கொண்டால், தனித் தனியான கட்டுரைகளையும் வைத்திருக்கலாம். அல்லது முழுமையான பார்வை இழப்பையும் பார்வைக் குறைபாட்டுக் கட்டுரைக்குள் இணைத்து, ஒரே கட்டுரைக்குள் கொண்டு வரலாம். கருத்துக்கள் தேவை. @Mayooranathan and Kanags: --கலை (பேச்சு) 11:04, 23 செப்டம்பர் 2017 (UTC)

இக்கட்டுரையை விரிவுபடுத்த 21 காரணிகளும் பண்டுவமுறையும் (சிகிச்சைமுறையும்) அமைந்த இரண்டு, மூன்று இணைய தளங்கள் உள்ளன. அவற்றின் பொழிப்பைப் பயன்படுத்தினால் கட்டுரை விரிவாகும். என்றாலும், போட்டிக்கு பார்வைக் குறைபாடு கட்டுரையைத் தெரிவு செய்தல் நலம். பின்னர் குருட்டுத்தன்மைக் கட்டுரையை மெதுவாக தகவல் உள்ள அளவுக்கு முழுமைப்படுத்தலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:50, 23 செப்டம்பர் 2017 (UTC)