தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான கணித ஒலிம்பியாட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான கணித ஒலிம்பியாட்ஸ் என்பது உலக அளவில் லாப நோக்கம் இல்லாமல் நடத்தும் ஒரு கணித போட்டி ஆகும். இப்போட்டி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கானது. நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படும், இத்தேர்வு முடிவுகள் போட்டியாளர் சார்ந்த பள்ளிக்கே அனுப்பப்படும். இதில் பள்ளி மாணவர்கள், தனியார்துறை பள்ளிகள் மற்றும் நிறுவணங்களில் பாயில்வோர்கள் பங்குபெறலாம்.[1] இப்போட்டியில் ஏறத்தாழ இருபத்து நான்கு நாடுகளிலிருந்து பங்குபெற்றுள்ளனர். இப்போட்டி இரு பிரிவுகள் கொண்டது அவை தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான பிரிவுகள். தொடக்கப் பள்ளி நிலையில் நான்கு முதல் ஆறாம் வகுப்புகளும், நடுநிலைப் பள்ளிகளுக்கான பிரிவில் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது, இருந்த போதிலும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடக்கும் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். இலட்சக் கணக்கான மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இப்போட்டியில் கலந்துகொள்கின்றனர்.  .

கணித ஒலிம்பியாட்ஸ் ஆசிரியர்களுக்கு இணைய வழி பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .

வரலாறு [தொகு]

கணித ஒலிம்பியாட்ஸ் என்ற அமைப்பை திரு .ஜார்ஜ் லேஞ்ச்நேர் துவக்கினர், இவர் கணித கல்வி சமுகத்தில் பல ஆண்டுகளாக சேவைபுரிந்துள்ளார். லேஞ்ச்நேர் எழுதிய தொடக்க நிலை கணித தீர்வுகள் கொண்ட பல புத்தகங்கள் எழுதியுள்ளார், ஒலிம்பியாட்ஸ் போட்டிக்காக லேஞ்ச்நேர் படைப்புகளிலிருந்து வழங்கபட்டுள்ளது. ஜார்ஜ் லேஞ்ச்நேர் இறந்த இரங்கல் செய்தி சண்டே நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் 2016 மே. 14 அன்று பிரசுரிக்கப்பட்டது.[2]

தற்பொழுது ஒலிம்பியாட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ரிச்சர்ட் கலமான். இவர் அமெரிக்க மாகாணத்தின் கணித துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The contests" பரணிடப்பட்டது 2017-09-28 at the வந்தவழி இயந்திரம், Maths Olympiads
  2. Fox, Margalit (May 14, 2006), "George Lenchner, 88, Dies After Life by the Numbers", த நியூயார்க் டைம்ஸ்

வெளி இணைப்புகள்[தொகு]