நாமக்கல் டிரான்ஸ்போர்ட் கேரியர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்டிசி லாஜிஸ்டிக்ஸ் இந்தியா [பி] லிமிடெட், (முன்னர்) நாமக்கல் டிரான்ஸ்போர்ட் கேரியர்ஸ் [பி] லிமிடெட்
NTC Logistics India [P] Limited, formerly Namakkal Transport Carriers [P] Ltd
வகைதனியார் வரையரை செய்யப்பட்ட நிறுவனம்
நிறுவுகைசென்னை, (1997)
தலைமையகம்தமிழ்நாடு, சென்னை, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகலாவிய
முதன்மை நபர்கள்கே. சந்திரமோகன் (தலைவர் மற்றும் மேளாண் இயக்குநர்)
இராஜசுந்தரம் (நிதி இயக்குநர்)
என். தில்லையரசன் (திட்ட- இயக்குநர்)
எஸ். முத்துசாமி (நடவடிக்கை பராமரிப்பு- இயக்குநர்)
தொழில்துறைசரக்குபோக்குவரத்து
வருமானம்INR 450 crore [1]
பணியாளர்2000 (2011) [2]
இணையத்தளம்www.ntclogistics.in

என். டி. சி லாஜிஸ்டிக்ஸ் இந்தியா [பி] லிமிடெட், முன்னர் நாமக்கல் டிரான்ஸ்போர்ட் கேரியர்ஸ் [பி] பிரைவேட் லிமிடெட் என்பது இந்தியாவில் தலைமையிடத்தைக் கொண்ட ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஆகும். இந் நிறுவனம் மூன்று நாடுகளில் 32 அலுவலகங்களுடன் செயல்படுகிறது. என்டிசி லாஜிஸ்டிக்ஸ் இந்தியா [பி] லிமிடெட் 2013 சூன் மாதத்தில் 450 கோடி ரூபாய்களை கையாண்டுள்ளது.[1]

வரலாறு[தொகு]

நாமக்கல் டிரான்ஸ்போர்ட் கேரியர் நிறுவனம் 1997 ஆம் ஆண்ட் கே. சந்திரமோகன், ராசாசுந்தரம், என். தீயராயன், எஸ். முத்துசாமி ஆகியோரால் நிறுவப்பட்டது. இது நாமக்கல் டிரான்ஸ்போர்ட் கேரியர்ஸ் பிரவேட் லிமிடெட் நிறுவனமாக 2001 இல் மாற்றப்பட்டது. துவக்கத்தில் நிறுவனமானது சரக்குப் போக்குவரத்தில் மட்டும் கவனம் செலுத்தியது.[3] [4]

முக்கிய திட்டங்கள்[தொகு]

காற்றாலை பிரிவு[தொகு]

கோயம்புத்தூருக்கு அருகில் கொங்கல்நகரில் 1.7-மெகாவாட் காற்றாலை மின்சார ஆலை நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டது.[4]

சென்னை மெட்ரோ[தொகு]

2013 ஆம் ஆண்டில், நாமக்கல் டிரான்ஸ்போர்ட் கேரியர்ஸ் பிரவேட் லிமிடெட் நிறுவனம், சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சாவோ பாலோவில் உள்ள அல்ஸ்டோம் அலகுக்கும், பிரேசிலில் இருந்து சென்னைக் துறைமுகத்திற்கு ஹைதராலிக் அச்சுகளை கோயம்பேடு பணிமனைக்கு கொண்டுவரவும். கப்பல் அனுப்பியது. 2013 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி சென்னை போர்ட் டிரஸ்டில் முதல் ரயில் வந்து, கோயம்பேடு டிப்போவில் ஜூன் 7, 2013 அன்று சரக்குகளை இறக்கப்பட்டன.[5]

சேவைகள்[தொகு]

ஸ்ரீவாரி எஞ்சினீயர்ஸ்[தொகு]

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஸ்ரீவாரி எஞ்சினியர்ஸ் நிறுவப்பட்டது. இது ரோட்டரி ரீஜெனரேஷன் ஏர் ப்ரீஹேட்டர், டூபுலார் ஏர் ப்ரீஹெட்டர், எலக்ட்ரோஸ்ட்டிக் ப்ரொபிபிடரேட்டர்ஸ் மற்றும் வெப்ப பரிமாற்ற உபகரணங்களைப் போன்ற கொதிகலன்களை வடிவமைத்தல், உற்பத்தி, பொறியியல் மற்றும் நிறுவுதல் சேவைகள் ஆகியவற்றில் நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது.[6]

என்டிசி லாஜிஸ்டிக்ஸ்[தொகு]

என்.டி.சி லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (என்டிசி), என்பது நாமக்கல் டிரான்ஸ்போர்ட் கேரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு சகோதர நிறுவனமாகும். 2008 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது. என்டிசி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் சரக்குகளை விமானம், கப்பல், சாலை போக்குவரத்து போன்றவை வழியாக சரக்கு பரிமாற்றச் சேவைகளில் ஈடுபட்டுள்ளது. இதில் இறக்குமதி, ஏற்றுமதி கப்பல் சேவைகள் அடங்கும். ஐரோப்பிய ஒன்றியம், தென் அமெரிக்கா, ஆபிரிக்க நாடுகள் போன்ற பகுதிகளில் சரக்கு பரிமாற்ற பணிகளில் ஈடுபட்டுவரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வி.சி.சி.-வாஸ்கோ கல்க்கா நிறுவனத்துடன் என்டிசி ஒரு கூட்டு நிறுவனமாக உள்ளது. என்டிசி லாஜிஸ்டிக்ஸ் ஐ.எசு.ஒ 9001: 2008, ISO 14001: 2004 மற்றும் OHSAS 18001: 2007 சான்றிதழ்களை பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனம் IATA, FIATA, MTO, FFFAI ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.[7] [8]

என்டிசி ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்[தொகு]

கனரக வாகன ஓட்டுநர் உரிம பயிற்சி உட்பட தொழில்நுட்ப கல்வியை வழங்குவதற்காக 2011 ஆம் ஆண்டில் என்.டி.சி போக்குவரத்து கல்வி கல்லூரி நிறுவப்பட்டது. நாமக்கல் அருகே அமைந்துள்ள இந்த கல்லூரியை, தமிழக அரசின் வருவாய் அமைச்சர் பி. தங்கமணியால் திறந்து வைக்கப்பட்டது. [9]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

  • 2012 - நாளைய தலைவர்கள்- இந்தியா மாா்ட்
    [10]
  • 2011 - 2011 - சியெட் போக்குவரத்து விருதுகள் வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் பணியாளர் மேலாண்மைக்காக [11][12]
  • 2010 & 2011 - சிறந்த தொழில்முனைவோர் விருது ஆசியா பசிபிக் தொழில் முனைவோர் விருதுகள். [13]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 http://www.motorindiaonline.in/aftermarket/namakkal-transport-carriers
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-25. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
  4. 4.0 4.1 "Namakkal Transport - Big cargo carriers". The Hindu (Chennai). April 24, 2004 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 26, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140226061749/http://www.thehindubusinessline.in/2004/04/24/stories/2004042401731700.htm. பார்த்த நாள்: February 26, 2014. 
  5. "Metro train coaches arrive at Koyambedu". The Hindu (Chennai). June 7, 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/metro-train-coaches-arrive-at-koyambedu/article4790225.ece. பார்த்த நாள்: February 26, 2014. 
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-10. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-02. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
  9. "Lack of training for drivers has led to rise in accidents, says Minister". The Hindu (Namakkal). August 29, 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/lack-of-training-for-drivers-has-led-to-rise-in-accidents-says-minister/article2407607.ece. பார்த்த நாள்: February 26, 2014. 
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-17. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
  12. http://issuu.com/rajmisra/docs/lt_march_2012_pdf
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-27. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.