மிரோஸ்லாவ் லாஜ்காக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிரோஸ்லாவ் லாஜ்காக்

மிரோஸ்லாவ் லாஜ்காக்  (Miroslav Lajčák  20 மார்ச்சு 1963  ) என்பவர் சுலோவாக்கியா நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆவார்.  இவர் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையின் தலைவராக 2017 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். 2017 செப்டம்பர் 12 ஆம் தேதியில் அவர் பதவியேற்க உள்ளார்.[1]

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

இளமையும் கல்வியும்[தொகு]

பிரட்டீஸ்லாவாவில் உள்ள கொமினியஸ் பல்கலைக்கழகத்தில் படித்து சட்டம் பயின்று பட்டதாரி ஆனார். பின்னர் பன்னாட்டு உறவுகள் என்ற கல்வியில் முதுகலைப்  பட்டம் பெற்றார்.  செருமனியில் பாதுகாப்பு தொடர்பான படிப்பில் ஈடுபட்டார். [2]

தூதுவர்ப் பணிகள்[தொகு]

லாஜ்காக் பொதுவுடைமை வீழ்ச்சி அடைவதற்கு முன் செக்கோசுலோவாக்கியாவில் பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக இருந்தார் 1988 இல்  செக்கோசுலோவாக்கியா அயலக அமைச்சரவையில் சேர்ந்தார். 1991 முதல் 1993 வரை மாசுகோவில் உள்ள செக்கோசுலோவாக்கியா மற்றும் சுலோவாக்கியா தூதரகங்களில்  பணி செய்தார். 1994 முத்த 1998 வரை சப்பான் நாட்டுக்கு சுலோவாக்கியாவின் தூதராக இருந்தார். 2001 முதல் 2005 வரை பெல்கிரேடில் சுலோவாக்கியாவின் தூதராகப் பணியாற்றினார். [3] பின்னர் 2007 சூன் முதல் 2009 மார்ச்சு வரை போஸ்னியா,  எரிசகோவினா பகுதிகளுக்கு உயர் மட்ட பிரதிநிதியாக அமர்த்தப்பட்டார்.

அமைச்சர் பணிகள்[தொகு]

2009இல் சுலோவாக்கியாவின் அயல்நாட்டு அமைச்சராகவும்,   2010 திசம்பர் முதல் 2012 ஏப்பிரல் வரை இரசியா கிழக்கு அண்மை நாடுகள் மேற்கு பால்கன்ஸ் ஆகியவற்றுக்கு மேலாண் இயக்குநராகவும் பணி ஆற்றினார். 2012 ஏப்பிரலில் சுலோவாக்கிய அமைச்சரவையில் அயலக அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராகவும் அமர்த்தப்பட்டார்.

ஐக்கிய நாட்டு அவை பொதுச் செயலாளர் தேர்தலில்[தொகு]

பான் கி மூன் என்ற ஐக்கிய நாட்டுப் பொதுச் செயலாளரை அடுத்து புதிய பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க லாஜ்காக் சுலோவாக்கியா வேட்பாளராக 2016 ஆம் ஆண்டில் விண்ணப்பத்தை அளித்தார். [4]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிரோஸ்லாவ்_லாஜ்காக்&oldid=3591149" இலிருந்து மீள்விக்கப்பட்டது