சுனிதா ராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுனிதா ராணி (Sunita Rani, பிறப்பு டிசம்பர் 4, 1979) ஒரு இந்தியத் தடகள வீரர் ஆவார். இவர் 14 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 1500 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும், 5000 மீ ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றவர். 1500 மீ ஓட்டப்பந்தயத்தில் 4: 06.03 என்ற அவரது நேரம் தற்போதைய தேசிய சாதனை ஆகும். அர்ஜுனா விருது மற்றும் பத்மசிறீ விருது [1] இவருக்கு வழங்கப்பட்டது. இவர் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_ராணி&oldid=3555242" இலிருந்து மீள்விக்கப்பட்டது