செவ்ரான் (முத்திரை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"செவ்ரான் (முத்திரை)"

செவ்ரான் (முத்திரை) (Chevron), ஒரு தலைகீழ் 'V' வடிவ வடிவத்தை குறிக்கிறது. இந்தச் வடிவமைப்பானது, வழக்கமாக கட்டடக்கலையில் ஒரு வகையான குறுக்குமறுக்கான கோண வேலைப்பாட்டை குறிக்கும். மேலும் இது இராணுவத்தினர் அணியும் பட்டையில், காவற்துறையினர் சீருடையில் (தரவாிசை அல்லது சேவையின் அளவைக் குறிக்க), அரச மரபுச்சின்னங்கள் மற்றும் கொடிகளிலும் பயன்படுத்தப்படுகிறது (Lacedaemonia (Λακεδαιμονία)) used a capital

பண்டைய வரலாறு[தொகு]

ஆரம்பகாலக் கலைகளில், மட்பாண்டங்களிலும் மற்றும் பாறைகளில் செதுக்கப்பட்ட ஓவியங்களிலும் செவ்ரான் வடிவத்தைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக கிரேக்க நாட்டில் கி.மு. சுமார் 1800 ல் தொல்லியல் துறையினரால் மீட்டு எடுக்கப்பட்ட கிரீட்டின் நொனோஸின் அரண்மனைக்குச் சொந்தமான மட்பாண்ட வடிவமைப்புகளில் கண்டுபிடிக்கப்பட்டது.[1] பண்டைய கிரேக்க நகரங்களுள் ஒன்றான ஸ்பார்த்தாக் (லாசிடோமோனியா) கேடயங்களில் லாம்டா (Λ) எழுத்து பயன்படுத்தப்பட்டது.

மரபுச் சின்னவியல்[தொகு]

அரசமரபுச் சின்னங்களிலுள்ள வடிவங்களிலும், மரபுச் சின்னங்களடங்கிய மேலங்கிகளில் காணப்படும் முக்கியமான, எளிமையான வடிவியல் வடிவங்களிலும் செவ்ரான் காணப்படுகிறது. செவ்ரானின் வடிவத்தில், தலைகீழாக்கல் உட்பட்ட பல மாற்றங்கள் செய்யப்படலாம். செவ்ரானின் முனைகள் வெட்டப்பட்டு, பிளவுபட்ட முனைகளானது பார்ப்பதற்கு உடைந்த மரத்தின் துண்டு போல் காட்சியளிக்கும்போது, இது ஒழுங்கில்லாத கோணல்-மாணலான வடிவத்தைக் கொண்டிருக்கும். இதன் பெயர் ”எல்கேட்” (éclaté) என அழைக்கப்படுகிறது. இயல்பான அளவை விடச் சிறியதாகக் குறுக்கப்பட்ட செவ்ரோன், செவ்ரோனெல் (chevronel) எனப்படுகிறது.

செவ்ரான் வரலாற்றின் தொடக்க காலத்தில் குறிப்பாக நார்மண்டியில் மரபுச் சின்னங்களாக தோன்றியது. ஸ்காண்டினேவியாவில் செவ்ரான் துடுப்பு மாதிாி அறியப்பட்டது; உதாரணமாக ஆரம்ப காலத்தில் இச்சின்னம் போர் வீரன் அர்மாந்தின் கரங்களில் தோற்றமளிக்கிறது.

முத்திரையின் தரம்[தொகு]

காமன்வெல்த் நாடுகள் அல்லது ஐக்கிய மாகாணங்களின் கோட்பாட்டைக் கவனிக்கும் பகுதிகளில், செவ்ரான்கள், இராணுவப் படைகளிலும் காவலர்களுக்கும் தரவரிசை பட்டியலிட ஒரு அடையாளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. செவ்ரான்கள் பொதுவாக தரவரிசைப்படி ஒன்று, இரண்டு, மூன்று என்று கொடுக்கப்படுகிறது. ஒன்று முதல் நான்கு செவ்ரான்கள் காவல் துறையில் சாதனை புாிந்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு தரம் வாாியாக வழங்கப்படுகிறது.அமெரிக்கர்கள் பயன்பாட்டில், செவ்ரோன்கள் பொதுவாக கழுத்தை நோக்கி சுட்டிக்காட்டுவதாக அமைக்கப்பட்டிருக்கும்; காமன்வெல்த் பயன்பாட்டில் அவர்கள் வழக்கமாக கழுத்தில் இருந்து வெளி நோக்கி அமைந்திருக்கும். காமன்வெல்த் மொழியில், செவ்ரான்களுக்கான சரியான சொல் "பட்டைகள்" என்று அழைக்கப்படுகிறது, தரவாிசையில் கோடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து தரம் மதிப்பிடப்படுகிறது. அதனால், காவல் உதவி ஆய்வாளர்களுக்கு தரமானது மூன்று பட்டையுள்ள செவ்ரானால் மதிப்பிடப்படுகிறது. கனடா மற்றும் ஆஸ்திரேலிய படைகள் பெரும்பாலும் "கொக்கிகள்" என்று செவ்ரான்களைக் குறிப்பிடுகின்றன. டச்சு ஆயுதப்படைகளில் செவ்ரான்களை புனைப்பெயராக "வாழைப்பழங்கள்" என்று அழைக்கின்றனர்.[2]

முத்திரையின் வேறு பயன்கள்[தொகு]

சில இராணுவத்தில், சிறிய செவ்ரான்கள் கீழ் இடது தோள்பட்டையில் அணியப்படுகிறது இது அவர்களின் பணிகால அளவைக் குறிப்பிடுகிறது. அமொிக்க இராணுவத்தில், வீரர்களின் சேவையானது கோடுகளைக் கொண்டு அளவிடப்படுகிறது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தங்கள் வாகனங்களில் அமைப்புசார் குறியீடாக பல்வேறு சார்புநிலைகளில் செவ்ரோன்களைப் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக அவர்கள் எந்த படைப்பிாிவைச் சார்ந்தவர்கள் என அறியப் பயன்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chevron (insignia)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்ரான்_(முத்திரை)&oldid=3246297" இலிருந்து மீள்விக்கப்பட்டது