குண்டுத் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குண்டுத் தீவு ( Gundu Island) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கொச்சி நகரத்தைச் சேர்ந்த பல தீவுகளில் ஒன்றாகும். நவம்பர் 1967 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத்தின் ஒருங்கிணைப்பு ஆணை குண்டுத் தீவை கொச்சி நகரின் ஒரு பகுதியாக அறிவித்தது.மிகவும் சிறிய தீவான குண்டுத் தீவு 5 ஏக்கர் (20,000 மீ 2) பரப்பளவில் அமைந்து முற்றிலும் தென்னை மரங்களால் சூழப்பட்டுள்ளது. வைப்பீன் தீவில் இருந்து படகு மூலம் மட்டுமே இத்தீவை அடைய முடியும்.

காலநிலை[தொகு]

குண்டுத் தீவின் குளிர்ந்த காற்றும் அமைதியான சுற்றுச்சூழலும் பல பார்வையாளர்களை ஈர்க்கிறது [1].

கட்டிடங்கள்[தொகு]

கயிறுகள் மற்றும் தரைவிரிப்புகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவன தொழிற்சாலைக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று மட்டுமே இத்தீவிலுள்ள கட்டிடம் ஆகும்[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டுத்_தீவு&oldid=3040662" இலிருந்து மீள்விக்கப்பட்டது