சுதர்லேண்ட் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதர்லேண்ட் அருவி
Map
அமைவிடம்நியூசிலாந்து, ப்யோட்லேண்ட், 44°48′.8028″S 167°43′48.76″E / 44.800223000°S 167.7302111°E / -44.800223000; 167.7302111
வகைTiered
மொத்த உயரம்581 மீட்டர்
வீழ்ச்சி எண்ணிக்கை3
நீளமான வீழ்ச்சியின் உயரம்248 மீட்டர்
சராசரிப்
பாய்ச்சல் வீதம்
11 m3/s

சுதர்லேண்ட் அருவி என்பது நியூசிலாந்தின், தெற்குத் தீவின்  மில்போர்ட் அருகில் உள்ளது.  இது 580 மீட்டர் (1,904 அடி) உயரத்தில் இருந்து கீழே விழுகிறது. இந்த அருவி நியூசிலாந்தில் உள்ள மிக உயரமான அருவி  என்று நம்பப்படுகிறது. எனினும், பிரவுன் அருவி 843 மீட்டர் (2,766 அடி) உயர மலைப் பகுதியில் இருந்து வழிந்து சற்றுத் தள்ளி கீழே விழுகிறது.[1]

அருவியில் விழும் தண்ணீர் மூன்று அடுக்கு அருவிகளாக உள்ளது, மேலே உள்ளது 229 மீட்டர் உயரம், நடுவில் உள்ளது 248 மீட்டர், அடியில் 103 மீட்டர் உயரம் கொண்டது. செங்குத்து உயரம் என்றால் 480 மீட்டரும், சாய்வுத் தொலைவு என்றால் 580 மீட்டர் நீளம் உடையதாக உள்ளது. இதன் பொருள் அருவி சுமார் 56 பாகையில் வழிகிறது.

சுதர்லேண்ட் அருவியின் அடிவாரமானது மில்ஃபோர்ட் ட்ராக்கில் க்வின்டின் பப்ளிக் ஷெல்டரிலிருந்து 90 நிமிடங்கள் (திரும்ப) நடைப்பயண தொலைவில் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jock Phillips. Waterfalls - A land of waterfalls, Te Ara - the Encyclopedia of New Zealand, Ministry for Culture and Heritage. ISBN 978-0-478-18451-8. Updated 1 March 2009. Retrieved 2 September 2010.
  2. Milford Track - Track description, New Zealand Department of Conservation.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதர்லேண்ட்_அருவி&oldid=3313663" இலிருந்து மீள்விக்கப்பட்டது