உள்ளூர் எல்லைப் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்ளூர் எல்லைப் போக்குவரத்து (Local border traffic) அல்லது சிறிய எல்லைப் போக்குவரத்து என்பது இருநாட்டு எல்லைப் பகுதி குடியிருப்பாளர்கள் எல்லையை கடந்து செல்லும் போக்குவரத்தை குறிக்கிறது. பல வழக்குகளில் உள்ளூர் எல்லைப் போக்குவரத்து இருதரப்பு ஒழுங்குமுறைக்கு உட்பட்டது. இதன் நோக்கம் குடியிருப்பாளர்கள் எல்லையைக் கடப்பதை எளிமைப்படுத்துவதாகும்.[1] உள்ளூர் அல்லது சிறிய எல்லைப் போக்குவரத்திற்காக அடிக்கடி எல்லை கடக்கும் முனைகள் உருவாக்கப்படுகின்றன.

உள்ளூர் எல்லைப் போக்குவரத்திற்கான விதிகளை ஐரோப்பா ஒன்றியம் 20 டிசம்பர் 2006 அன்று உருவாக்கியது.[2]

யுகோசோலேவியா[தொகு]

முன்னாள் பொதுவுடைமை நாடுகள், பன்னாட்டுப் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க சுதந்திரத்தை அனுபவித்தன. 1960 இல் யுகோசோலேவியா-இத்தாலி உள்ளூர் எல்லைப் போக்குவரத்திற்காக சுமார் 10 லட்சம் கடக்கும் பாதைகளை இருபக்க எல்லை போக்குவரத்திற்காக பதிவு செய்தது.[3] 1977இல் யுகோசோலேவியா உள்ளூர் எல்லைப் போக்குவரத்திற்காக 55 ஒப்பந்தங்களை அண்டை நாடுகளுடன் ஏற்படுத்தியிருந்தது. அவை இத்தாலியுடன் 7, ஆத்திரியாவுடன் 11, அங்கேரியுடன் 8, இரோமானியாவுடன் 10, பல்கேரியாவுடன் 8 மற்றும் கிரீசுடன் 5 என்பனவாகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Steve Peers, EU Justice and Home Affairs Law, p. 210
  2. Regulation (EU) No 1342/2011 of the European Parliament and of the Council of 13 December 2011 amending Regulation (EC) No 1931/2006 as regards the inclusion of the Kaliningrad oblast and certain Polish administrative districts in the eligible border area
  3. Review: Yugolsav Magazine, 1961, "local+border+traffic p.43
  4. Vojislav Mićović, Velimir Popović, ugoslavia's openness to the world: the freedom of exchange of information and cultural goods and of movement of people, p. 97