பார்மிக் நீரிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்மிக் நீரிலி
Structural formula of formic anhydride
Ball-and-stick model of the formic anhydride molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பார்மிக் நீரிலி[1]
வேறு பெயர்கள்
மெதனோயிக் நீரிலி
பார்மைல்ஆக்சிமெத்தனோன்
இனங்காட்டிகள்
1558-67-4 Y
Beilstein Reference
1901016
ChEBI CHEBI:36657
ChemSpider 7827603 Y
Gmelin Reference
1041427
InChI
  • InChI=1S/C2H2O3/c3-1-5-2-4/h1-2H Y
    Key: VGGRCVDNFAQIKO-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9548680
SMILES
  • O=COC=O
பண்புகள்
C2H2O3
வாய்ப்பாட்டு எடை 74.04 g·mol−1
தோற்றம் நிறமற்ற வாயு
கொதிநிலை 24 °C (75 °F; 297 K) at 20 மிமீபாதரசம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பார்மிக் நீரிலி, (Formic anhydride) C
2
H
2
O
3
என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது மெதனோயிக் நீரிலி எனவும் அழைக்கப்படுகிறது. இதன் அமைப்பு வாய்ப்பாடு (H(C=O)−)2O ஆகும். இது பார்மிக் அமிலத்தின் (HCOOH) நீரிலி ஆகும். .

தயாரிப்பு[தொகு]

பார்மைல் புளோரைடுடன் ஈதரில் உள்ள சோடியம் பார்மேட்டை −78 °செ வெப்பநிலையில் வினைப்படுத்துவதன் மூலம் பார்மிக் நீரிலியானது தயாரிக்கப்படுகிறது.[2] இது பார்மிக் அமிலத்தை ஈதரில் உள்ள N,N'-டைசைக்ளோஎக்சைல்கார்போடையிமைடுடன் ((C
6
H
11
−N=)2C) −10 ° செ வெப்பநிலையில் வினைப்படுத்துவதன் மூலமும் தயாரிக்கப்படுகிறது,[3] இது அசிட்டிக் பார்மிக் நீரிலியின் சரியான விகிதமற்ற சிதைவின் மூலமாகவும் பெறப்படுகிறது.[4]

பண்புகள்[தொகு]

பார்மிக் நீரிலியானது 20 மிமீ பாதரச அழுத்தத்தில் 24 °செ கொதிநிலை உடைய நீர்மமாகும்.[3] இச்சேர்மமானது, டை எதில் ஈதர் கரைசலில் நிலைத்தன்மை உடையது. இது குறைவான வெப்பநிலை மற்றும் அழுத்தநிலையில் வாலை வடித்தல் மூலமாக பிரித்தெடுக்கப்படுகிறது. ஆனால், அறை வெப்பநிலையை விட அதிகமான வெப்பநிலையில் இது சிதைவுறுகிறது.[3] இது பார்மிக் அமிலம் மற்றும் கார்பன் மோனாக்சைடாக சிதைவுறுகிறது.[5]

பார்மிக் நீரிலியின் சிதைவு வினையில் பார்மிக் அமிலமானது வினைவேகமாற்றியாக செயல்படுகிறது.[3]

வாயு நிலையில் உள்ள ஓசோனுடனான எத்திலீனின் வினையில் பார்மிக் நீரிலியானது கண்டறியப்படலாம்.[6] இந்த பார்மிக் நீரிலி மூலக்கூறானது வாயு நிலையில் சமதள அமைப்பைப் பெற்றுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. பக். 909. doi:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-182-4. 
  2. George A. Olah, Yashwant D. Vankar; Massoud Arvanaghi; Jean Sommer (1979), Formic Anhydride. Angewandte Chemie Int. Ed. Engl., volume 18, issue = 8, page = 614. எஆசு:10.1002/anie.197906141.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 G. Wu, S. Shlykov, F. S. Van Alseny, H. J. Geise, E. Sluyts, B. J. Van der Veken (1995), Formic Anhydride in the Gas Phase, Studied by Electron Diffraction and Microwave and Infrared Spectroscopy, Supplemented with Ab-Initio Calculations of Geometries and Force Fields. J. Phys. Chem., volume 99, issue 21, pages 8589–8598 எஆசு:10.1021/j100021a022
  4. R. Schijf, J. W. Scheeren, A. van Es, W. Stevens (1965) Mixed carboxylic acid anhydrides: IV. formic anhydride. Recueil des Travaux Chimiques des Pays-Bas, volume 84, issue 5, pages 594–596. எஆசு:10.1002/recl.19650840510
  5. Boogaard, A.; H. J. Geise; F. C. Mijlhoff (July 1972). "An electron diffraction investigation of the molecular structure of formic anhydride". Journal of Molecular Structure (Elsevier Science) 13 (1): 53–58. doi:10.1016/0022-2860(72)87031-5. http://www.sciencedirect.com/science/article/pii/0022286072870315. பார்த்த நாள்: 9 September 2011. 
  6. A. Vaccani, A. Bauder and Hs. H. Günthar (1975), The Microwave Spectrum of Formic Anhydride. Abstracts of OSU International Symposium on Molecular Spectroscopy 1970-1979
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்மிக்_நீரிலி&oldid=2749098" இலிருந்து மீள்விக்கப்பட்டது