இவான் விளாதிமீரொவிச் மிச்சூரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இவான் விளாதிமீரொவிச் மிச்சூரின்
Ivan Vladimirovich Michurin
பிறப்புஅக்டோபர் 27 [யூ.நா. அக்டோபர் 15] 1855
இறப்புசூன் 7, 1935
தேசியம்உருசியா
துறைதாவரவியல்
பணியிடங்கள்லெனின் வேளாண்மை கூட்டு அகாடமி
அறியப்படுவதுஇயற்கைத் தேர்வு

இவான் விளாதிமீரொவிச் மிச்சூரின் (Ivan Vladimirovich Michurin, உருசியம்: Иван Владимирович Мичурин) (அக்டோபர் 27 [யூ.நா. அக்டோபர் 15] 1855 – சூன் 7, 1935) என்பவர் உருசியாவைச் சேர்ந்த தாவரவியலாளர் ஆவார். இவர் புதிய தாவர வகைகளை தேர்வு செய்யும் பழகுனராக விளங்கினார்.

இவர் சோவியத் அறிவியல் அகாடமி மற்றும் லெனின் வேளாண்மை கூட்டு அகாடமி ஆகியவற்றில் கௌரவ உறுப்பினர். இவருடைய முறைகள் வேளாண்மை அறிவியல் மற்றும் மரபியலுக்கு சவாலாக அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தன. இதையெ லைசென்கோயிஸம் மற்றும் மிச்சுரினிஸம் என்று அழைக்கிறார்கள். இவருக்கு உறுதுணையாக இருந்தவர் ட்ரோபிம் லைடிசன்கோ ஆவார். இவரது வாழ்நாள் முழுவதும் பழவகைமரங்களில் புதிய இனங்களை உருவாக்குவதிலேயே பணியாற்றினார். இவர் 300க்கும் மேற்பட்ட புதிய வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இவருக்கு ஆர்டர்ஆப் லெனின் மற்றும் ஆர்டர் ஆப்தி டிரட் பேனர்ட ஆப் லேபர் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "100th Anniversary of birth of Ivan Vladimirovich Michurin.". Biokhimiia 20 (5): 513–5. 1955. பப்மெட்:13283985. 

வெளி இணைப்புகள்[தொகு]