திடக்கழிவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திடக்கழிவு (solid waste) என்பது பொதுவாக பயன்படாத, தேவையற்ற பொருளாகும். இது திரவமாகவோ அல்லது வாயுவாகவோ இல்லாதிருப்பின் இவற்றை திடக்கழிவுகள் என்று அழைப்பர். திடக்கழிவுக்கு எடுத்துக்காட்டு - பழைய செய்தித்தாள்கள், புட்டி, குவளைகள், உதவாத வீட்டுப் பொருட்கள், மரச்சாமான்கள் பறக்கும் பொருட்கள், தொழில் கழிவுகள்.

திடக்கழிவுகளின் வகைகள்[தொகு]

வீட்டுக்கழிவுகள்[தொகு]

வீட்டு உபயோகப் பொருட்களில் இருந்து வரும் குப்பைகள், சமையல் கழிவுகள், துணிகள், பிளாஸ்டிக் போன்றவை.

நகராண்மைக் கழிவுகள்[தொகு]

வீடு மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் குப்பை, கழிவுப்பொருள் போன்றவை.

தொழிற்சாலை கழிவுகள்[தொகு]

கட்டுமான பொருட்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகள், உலோகத்துண்டுகள் போன்றவை.

வேளாண்மைக் கழிவுகள்[தொகு]

அறுவடைக்குப் பின் உண்டாகும் பண்ணைக் கழிவுகள் போன்றவை.

சிறப்புக் கழிவுகள்[தொகு]

அணு ஆற்றல் இயந்திரங்கள், ஆய்வுக் கூடங்கள், மருத்துவமனைகள் முதலியவற்றிலிருந்து வெளியேறும் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் போன்றவை.

கழிவு உருவாகும் இடங்கள்[தொகு]

மனிதச் செயல்பாடுகளின் விளைவாக உருவாகும் விரும்பத்தகாத கழிவுப் பொருட்கள் தேங்கி விடுவதால் நிலம் மாசுபட்டு மண்வளம் பாதிக்கப்படுகிறது. இக்கழிவுகளில் குப்பை, காகிதம், துணி, மரக்கட்டை, பிளாஸ்டிக் இரும்புக் கழிவுகள் மீதமான உணவுப்பொருட்கள், பண்ணைக்கழிவுகள் முதலியவை அடங்கும். 1997ல் 480 லட்சம் டன்களாக இருந்த நகா்புறக் கழிவுகள் தற்போது 10 கோடி டன்களாக அதிகரித்துள்ளது.[1]

மேற்கோள்[தொகு]

  1. UNICEF - நவம்பர்2011- பள்ளி சுகாதாரம் மற்றும் உடல்நலக் கல்வி ஆசிரியர் கையேடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திடக்கழிவுகள்&oldid=3341729" இலிருந்து மீள்விக்கப்பட்டது