மாடிலின் ஆல்பிரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாடிலின் ஆல்பிரைட்
1997-இல் மாடிலின்
64-வது அமெரிக்க வெளியுறவுச் செயலர்
பதவியில்
சனவரி 23, 1997 – சனவ்ரி 20, 2001
குடியரசுத் தலைவர்பில் கிளின்டன்
முன்னையவர்வாரன் கிறித்தோபர்
பின்னவர்கொலின் பவெல்
ஐநாவுக்காம அமெரிக்கத் தூதர்
பதவியில்
சனவரி 27, 1993 – சனவரி 21, 1997
குடியரசுத் தலைவர்பில் கிளின்டன்
முன்னையவர்எட்வர்ட் பெர்க்கின்சு
பின்னவர்பில் ரிச்சார்ட்சன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மரீ யனா கொர்பெலோவா

(1937-05-15)மே 15, 1937
பிராகா, செக்கோசிலோவாக்கியா
இறப்புமார்ச்சு 23, 2022(2022-03-23) (அகவை 84)
வாசிங்டன், டி. சி., ஐக்கிஅய் அமெரிக்கா
அரசியல் கட்சிமக்களாட்சி
துணைவர்யோசப் ஆல்பிறைற் (1959-1982, மணமுறிவு)
பிள்ளைகள்3
பெற்றோர்
  • யோசப் கோர்பெல் (father)
கல்வி
கையெழுத்து

மாடிலின் ஆல்பிரைட் (Madeleine Jana Korbel Albright, மே 15 1937 — மார்ச்சு 23 2022) அமெரிக்க நாட்டுப் பெண் அரசியல்வாதி மற்றும் தூதுவர் ஆவார்.[1] ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண் வெளி விவகாரச் செயலாளர் ஆவார். பில் கிளிண்டன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்தபோது இவர் இப்பதவியில் அமர்த்தப் பட்டார். 1997 ஆம் ஆண்டு சனவரி 23 முதல் இப்பதவியை ஏற்றுக்கொண்டார்.

இளமையும் கல்வியும்[தொகு]

இவருடைய தந்தையார் ஜோசப் கார்பல் தூதுவர் குழுவில் இருந்தார். 1939 இல் நாசிக்களின் தாக்குதல்களிலிருந்து தப்பித்து, இவரது குடும்பம் செக்கோசுலோவாக்கியாவில் தங்கியது. மாடிலின் ஆல்பிரைட் பிரேகில் பிறந்தார். பின்னர் பெல்கிரேட், இலண்டன் ஆகிய நாடுகளில் வாழ்ந்து, இறுதியாக அமெரிக்காவின் கொலராடோவிற்கு இவரது குடும்பம் வந்து சேர்ந்தது. 1959 இல் வெல்லெஸ்லி கல்லூரியில் அரசியல் கல்வி பயின்றார். 1968 இல் முதுவர் பட்டம் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1976 இல் சட்டத்திலும் அரசியலிலும் முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்[தொகு]

சனநாயகக் கட்சி அதிகாரத்தை இழந்த காலகட்டத்தில் ஆல்பிரைட் தனியார்த் துறையில் வேலைக்குப் போனார். ஜார்ஜ் டவுன் பல்கலைக் கழகத்தில் பன்னாட்டு விவகாரங்கள் துறையின் பேராசிரியர் ஆனார். அப்பொழுது சிறந்த ஆசிரியர் என்று நான்கு முறை இவருக்கு விருது வழங்கப்பட்டது.

ஜிம்மி கார்டர் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தபோது 1978 ஆம் ஆண்டில் தேசியப் பாதுகாப்பு சபையில் மாடிலின் ஆல்பிரைட் பணி புரிந்தார். பின்னர் 1993 இல் பில் கிளிண்டன் இவரை ஐக்கிய நாட்டு சபைக்கு தூதுவராக அமர்த்தினார். 1996 இல் வெளிவிவகாரத் துறைச் செயலராக ஆனார். பில் கிளிண்டனின் இரண்டாம் முறை ஆட்சிக்காலம் வரை இவர் இப்பதவியில் இருந்தார்.

ஆல்பிரைட் அமெரிக்க வெளிவிவகாரச் செயலராக இருந்தபோது, உலகில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சனநாயகம் தழைக்க வேண்டும் என்றும் கருத்துப் பரப்பினார். சோவியத் நாட்டிலிருந்து வடகொரியா போன்ற நாடுகளுக்கு அணு ஆயுதங்கள் பரவுவதை தடுப்பதற்கு முயன்றார். நேட்டோ அமைப்பில் உறுப்பினர் தொகை அதிகப் படுத்துவதில் அக்கறை காட்டினார். 1999இல் கொசாவோவில் பிரசினைகள் ஏற்பட்டபோது படைகள் அனுப்பி அமைதி உண்டாக்கச் செய்தார். சீனா, வியத்நாம் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா நல்லுறவு கொள்வதற்குச் செயலாற்றினார். இசுரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள சிக்கல்களுக்கு அமைதிப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முயன்றார். 2000 ஆம் ஆண்டு அக்டோபரில் ஆல்பிரைட் அமெரிக்க வெளியுறவுச் செயலர் என்கிற முறையில் முதன் முதலாக வடகொரியாவுக்குச் சென்று வரலாறு படைத்தார்.[2]

எழுதிய நூல்கள்[தொகு]

  • மேடம் செக்ரட்டரி நினைவுகள் (2003)
  • தி மைட்டி ஆண்டு ஆல்மைட்டி (2006)
  • ரீட் மை பின்ஸ் (2009)
  • பிரேகு வின்டர் (அண்மையில்)

இறப்பு[தொகு]

ஆல்பிரைட் புற்று நோய் காரணமாக தமது 84 ஆவது அகவையில், 2022 மார்ச்சு 23 ஆம் நாள் வாசிங்டனில் இறந்தார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.biography.com/people/madeleine-albright-9179300
  2. "Frontline: Kim's Nuclear Gamble: Interviews: Madeleine Albright". PBS. 2003-03-27. பார்க்கப்பட்ட நாள் 2009-06-01.
  3. Kelly, Caroline (மார்ச்சு 23, 2022). "Madeleine Albright, first female US secretary of state, dies" (in ஆங்கிலம்). CNN. https://www.cnn.com/2022/03/23/politics/madeleine-albright-obituary/index.html. பார்த்த நாள்: மார்ச்சு 23, 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாடிலின்_ஆல்பிரைட்&oldid=3406845" இலிருந்து மீள்விக்கப்பட்டது