விப்ஜியார் திரைப்பட விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விப்ஜியார் பன்னாட்டு திரைப்பட விழா
வார்ப்புரு:Caption
இடம் திரிச்சூர், இந்தியா
நிறுவப்பட்டது 2006
வழங்கியது விப்ஜியார் திரைப்பட குழு
இணையத் தளம்

விப்ஜியார் திரைப்பட விழா (ViBGYOR Film Festival) என்பது சர்வதேச குறு மற்றும் ஆவணப்படங்களுக்கான திரைப்பட விழா ஆகும். இவ்விழா, இந்தியாவிலுள்ள கேரளா மாநிலத்தில் திரிச்சூர் நகரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.[1] விப்ஜியார் திரைப்பட விழாவானது, விப்ஜியார் திரைப்பட குழு, சேத்னா ஊடக நிறுவனம், நோட்டம் டிராவலிங் திரைப்பட விழா, நவசித்ரா திரைப்படக் கழகம், விஷுவல் சர்ச், மூவிங் ரிப்பபிளிக், சென்சு, ஜிஏஐஏ ஆகிய இவற்றின் ஆதரவுடன் திருச்சூர் மாநகராட்சி, ஜில்லா பஞ்சாயத்து, இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு, கேரளா சாலாச்சித்ரா அகாதமி, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு, ஆக்‌ஷனெய்டு இந்தியா, ஐசிசிஓஓ-தெற்காசிய மற்றும் பிற பல்வேறு திரைப்பட சங்கங்கள் சேர்ந்து ஆண்டுதோறும் நடத்துவது தான் இத்திரைப்பட விழாவாகும்.

திரைப்பட அலைக்கற்றை[தொகு]

தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய திரைப்பட விழாவாக, விப்ஜியார் திரைப்பட விழா உள்ளது. ஒவ்வொரு வருடமும் திரிச்சூர் சங்கீத நாடக அகாடமி வளாகத்தில் நடைபெறும் ஐந்து நாள் திரைப்பட விழாவாகும். விப்ஜியாரின் 3 வகையான திரைப்பட தொகுப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:

  • ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு தலைப்புகள் கொண்ட “அந்த ஆண்டின் நோக்கம்”
  • விப்ஜியார் அலைக் கற்றைத் தொகுப்பு. இது பின்வரும் ஏழு உப பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
    • அடையாளங்கள்
    • உாிமைகள்
    • சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி சார்பியல்
    • நாடு மற்றம் மாநிலம்
    • பாலினம் மற்றும் பாலீர்ப்பு
    • அடிப்படைவாதம் (எதிர்) வேற்றுமை
    • கலாச்சாரம் மற்றும் ஊடகம்
  • கேரள திரைப்படங்களுக்கான ”கேரளா அலைக்கற்றை”

வகைமை[தொகு]

அசைப்படம், ஆவணப்படம், சோதனைமுயற்சியாக எடுக்கப்பட்ட படங்கள், இசை வீடியோ மற்றும் குறும் படங்கள்.

நிகழ்வு வரலாறு[தொகு]

  • முதல் பதிப்பு: பிப்ரவரி 2006[2]
  • இரண்டாம் பதிப்பு: மே 2007
  • மூன்றாம் பதிப்பு: பிப்ரவரி 2008
  • நான்காவது பதிப்பு: பிப்ரவரி 2009
  • ஐந்தாவது பதிப்பு: பிப்ரவரி 2010
  • ஆறாவது பதிப்பு: ஜனவரி 2011
  • ஏழாவது பதிப்பு: பிப்ரவரி 2012
  • எட்டாவது பதிப்பு: பிப்ரவரி 2013
  • ஒன்பதாவது பதிப்பு: பிப்ரவரி 2014

கருத்து[தொகு]

  • 2006: 'தண்ணீர்'
  • 2007: 'புவி'
  • 2008: 'சக்தி'
  • 2009: 'உணவு இறைமை'
  • 2010: 'தெற்காசியாவின் மாநில, கம்யூனிச மற்றும் அபிவிருத்தி மோதல்கள்'
  • 2011: 'தெற்காசியாவின் அரசியல் திரைப்படம் மற்றும் ஊடக செயற்பாடு'[3]
  • 2012: 'தெற்காசியா: வாழ்க்கையும் வாழ்வகையும்'
  • 2013: 'திருட்டுப்போன ஜனநாயகங்கள்'
  • 2014: 'பாலின நீதி'

திரையிடப்பட்ட திரைப்படங்கள்[தொகு]

  • கடந்த காலக்கூறுகள்[4]
  • மறுவிழி திரைப்படம்[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vibgyor International Film Festival". britfilms. பார்க்கப்பட்ட நாள் 2010-05-11.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "ViBGYOR Film Festival: a brief Event History". ViBGYOR Film Festival. பார்க்கப்பட்ட நாள் 2010-05-11.
  3. "Frames for thought". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2012-03-02.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. http://www.thehindu.com/features/downtown/fragrance-of-the-past/article7238900.ece
  5. http://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/Celebrating-a-Master/2015/08/10/article2966158.ece