பூவாடைக்காரி வழிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூவாடைக்காரி அம்மன் வழிபாடு என்பது புடவையை வைத்து வழிபடும் வழக்கமாகும். பூ என்பதற்கு பூப்பு என்பது பொருள். [1] பூப்பு என்பதற்கு பூப்படைதல், மாதவிடாய் என்பது பொருள். ஒவ்வொரு வீட்டிலும் பருவம் எய்திய ஆண், பெண்கள் கன்னிகழிவதற்குமுன் இறந்துவிட்டால் அவர்களை வழிபடுவது பூவாடைக்காரி வழிபாடு ஆகும்.

அமைவிடம்[தொகு]

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் அனைத்து ஊர்களிலும் பூவாடைக்காரி வழிபாடு உள்ளது.

உடை படைத்தல்[தொகு]

பூவாடைக்காரி வழிபாட்டில் உருவச்சிலை இல்லை. இறந்த ஆண் முன்னோருக்கு வெள்ளைத் துண்டும், பெண் முன்னோருக்கு சிவப்புத் துண்டு அல்லது புடவையும் வைத்து வழிபடுவர். அவ்வாடைகளே முன்னோர்களாகக் கருதப்படுகிறது. மேலும் கரகம் சோடித்து அக்கரகத்தையே முன்னோர்களாகக் கருதுகின்றனர்.

கோயில் அமைப்பு[தொகு]

வீடுகளில் வழிபடும் வழக்கம் கொண்டோர் பூசை அறையில் படைக்கின்றனர்.

வழிபாடு[தொகு]

குளக்கரையில் அல்லது கிணற்றங்கரையில் கரகம் சோடித்து அதை முன்னோராகக் கருதி அவர்களை அழைத்துவந்து பூசை அறையில் வைத்து வழிபடுவர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் நாளில் இவ்வழிபாடு நடைபெறும்.

ஆடி மாதத்தில் புடவைக்காரி வழிபாடு நடத்தப்படுகிறது. [1]

வழிபடுவோர்[தொகு]

வன்னியர், துளுவ வேளாள முதலியார், ரெட்டியார், சைவப் பிள்ளை மற்றும் செட்டியார் போன்ற குலத்தினர் இவ்வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

திருவிழா[தொகு]

கன்னிமார் அழைத்தல், பொங்கல் படையல், ஆடுகள், கோழிகள் பலியிடுதல், காடேறுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல் ஆகியவை திருவிழா வழிமுறைகளாகும்.‌ சில இடங்களில் இரண்டு மூன்று தினங்களுக்குத் திருவிழா நடைபெறுகிறது. [1]

கோயில்கள்[தொகு]

  • புதுக்கோட்டை நார்த்தாமலை பூவாடைக்காரி அம்மன் கோயில் [2]
  • அன்னசாகரம் பூவாடைக்காரியம்மன் கோயில்
  • அள்ளாளபுரம் புடவை காரியம்மன் கோயில்
  • வாழைப்பந்தல் பூவாடைக்காரி கோயில்

உசாத்துணைகள்[தொகு]

  • பெண்ணிய நோக்கில் செஞ்சி நாட்டுப்புற அம்மன் தெய்வங்கள், ஜோதிராஜன் பதிப்பகம், ஓசூர், 2008.
  • துளசி. இராமசாமி, நெல்லை மாவட்ட நாட்டுப்புறத்தெய்வங்கள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,1985

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "புடவைக்காரி வழிபாடு". Hindu Tamil Thisai. 24 ஜூலை, 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Muthu Mari Amman Temple : Muthu Mari Amman Muthu Mari Amman Temple Details | Muthu Mari Amman- Narthamalai | Tamilnadu Temple | முத்து மாரியம்மன்". temple.dinamalar.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவாடைக்காரி_வழிபாடு&oldid=3823156" இலிருந்து மீள்விக்கப்பட்டது