பூட்டான்-நேபாள உறவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூட்டான்-நேபாளம் உறவுகள்
Bhutan மற்றும் Nepal நாடுகள் அமையப்பெற்ற வரைபடம்

பூட்டான்

நேபாளம்

பூட்டான்-நேபாள உறவுகள் (Bhutan–Nepal relations) என்பது பூட்டான் மற்றும் நேபாள நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளைக் குறிக்கின்றன. 1983 இல் இவ்விரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் முறையாக நிறுவப்பட்டன. இந்த இரண்டு இமயமலைகளுக்கிடையேயுள்ள  நாடுகளும் கிட்டத்தட்ட நாலாபக்கமும் மலைகளால் சூழப்பட்ட நாடாகும். 

இந்த இரு நாடுகளையும் பிரிக்கக்கூடிய ஒரே இந்திய மாநிலம் சிக்கிம் ஆகும். இந்த இரு நாடுகளும் இந்தியாவையும் சீன மக்கள் குடியரசையும் எல்லைகளாகக் கொண்டுள்ளன.  எனினும், பூட்டானிய அகதிகள் நெருக்கடி காரணமாக தற்பொழுது இரு நாட்டு உறவுகளும் சற்று பலவீனப்பட்டு உள்ளது.

நிலைமை[தொகு]

பூட்டான் மற்றும் நேபாளம் இமயமலையில் அமைந்த நாடுகளாகும். 2008 வரை நேபாளம் ஒரு முடியாட்சி நாடாகும். இரண்டு நாடுகளும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (சார்க்) அமைப்பில் நிறுவன உறுப்பு நாடுகளாகும். நேபாளம்-பூட்டான் நட்புறவு மற்றும் கலாச்சார சங்கம் 1969 ஆம் ஆண்டில்  இரு நாடுகளுக்கிடையே நல்லுறவுகளைப்  பேணுவதற்காக  காத்மாண்டுவில் நிறுவப்பட்டது.[1]

1983 ஆம் ஆண்டில் இரு நாடுகளும்  முறையாக இராசாங்க உறவுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளன. 1987 ஆம் ஆண்டில் நேபாளத்தில் நடைபெற்ற மூன்றாவது சார்க் மாநாட்டில் பூட்டான் மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் கலந்து கொண்டார். 1988 ல் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள மறைந்த நேபாள மன்னர் பிதேந்திரா பூட்டானுக்கு சென்றார். சமீபத்தில், பூட்டான் பிரதமர் 2002 ல் நேபாளத்திற்கு  நல்லுறவினை மேம்படுத்தும் வகையில் சென்றார். 2015 ல் பூட்டான் பிரதமர் செரிங் டோப்கே சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள நேபாளத்திற்கு சென்றார்.

அகதிகள் நெருக்கடி[தொகு]

கிழக்கு நேபாளத்தில் ஏழு UNHCR முகாம்களில் வாழும் பூட்டானிய அகதிகளின் பிரச்சனையானது இரு நாடுகளும் எதிர்கொண்டுள்ள ஒரு முக்கிய பிரச்சினையாகும். பூட்டானிய அகதிகளின் எண்ணிக்கை  85,000 முதல் 1,07,000 வரை இருக்கும். பெரும்பாலான அகதிகள் பூட்டான் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், பூட்டான் நாடு அவர்களை "தானாகப் புலம் பெயர்ந்தோர்" எனக் கூறி, தங்கள் நாட்டு குடியுரிமையை மறுத்து, அகதிகளாக்கியுள்ளனர். பெரும்பாலான அகதிகள் பூட்டானில் குடியேறிய நேபாள வம்சாவளியைச் சேர்ந்த லோட்சம்பா - நேபாளி மொழி  பேசும் இந்துக்களாகும்.[2][3][4]

மேற்குறிப்பட்டுள்ள அகதி முகாம்களில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய பல கிளர்ச்சி குழுக்களானது, 2008 ஆம் ஆண்டில் பூட்டானில் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக  இருந்ததாக  கூறப்படுகிறது.[3][4] பலஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை முயற்சிகள் செய்தப் பின்னரும் எந்தவொரு விளைவையும் ஏற்படுத்த இயலவில்லை. முடிவில் பல்வேறு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா 60,000 அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு ஒப்புக்கொண்டது.

வர்த்தகம்[தொகு]

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக வளர்ச்சி அகதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது.  அதில் 2008-09 ஆம் ஆண்டில் நேபாளத்துக்கு பூட்டானின் ஏற்றுமதி ரூ. 300 மில்லியன், நேபாளத்தின் பூட்டான் ஏற்றுமதிகள் ரூ. 200 மில்லியனாகும். 2004 ஆம் ஆண்டில், நேபாளம் மற்றும் பூட்டான் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, நேபாளம் மற்றும் பூடான் இடையே விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் பூட்டான் பாரோ மற்றும் நேபாள காத்மாண்டுவிற்கும் இடையே ஒரு  வாரத்திற்கு இரண்டு முறை விமானங்கள் என்பதிலிருந்து ஒரு வாரத்திற்கு  ஏழு விமானங்கள் என விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளின் வணிக  பிரதிநிதிகள் வருகை பரிமாற்றத்தின் மூலம், இரு நாடுகளும் சமீபத்தில் இணைச் செயலாளர் நிலையில் ஒரு வணிகக்கூட்டு ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhutan - Other Countries". Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 2010-09-18.
  2. Stuart Notholt (2008). Fields of Fire: An Atlas of Ethnic Conflict. Troubador Publishing Ltd.. பக். 5.19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-906510-47-3. 
  3. 3.0 3.1 "Background Note: Bhutan - Bureau of South and Central Asian Affairs". U.S. Department of State. Archived from the original on 6 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-09-18.
  4. 4.0 4.1 "First of 60,000 refugees from Bhutan arrive in the U.S." CNN. 2008-03-25. பார்க்கப்பட்ட நாள் 2010-09-18.
  5. "Bhutan-Nepal trade talks". Bhutan News Service. 2010-03-18. Archived from the original on 2011-07-07. பார்க்கப்பட்ட நாள் 2010-09-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டான்-நேபாள_உறவுகள்&oldid=2458131" இலிருந்து மீள்விக்கப்பட்டது