கயிற்றுவழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கயிற்றுவழி
கயிற்றுவழி

கயிற்றுவழி என்பது இரு இடங்களுக்கிடையில் கயிற்றைக் கட்டி, அதன் வழியாகப் பொருள்களை அனுப்புவதற்குக் கயிற்று வழி(Rope way) எனப்பெயர். இது 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பட்டு வருகிறதெனத் தெரிகின்றது.

=== பயன்கள் ===ஆழமான பள்ளத்தாக்குகளையும், செங்குத்தான குன்றுகளையும், சுழியுள்ள ஆழமான நீரோட்டத்தையும் கடக்க கயிற்று வழி பயன்படுகின்றது.

வகைகள்[தொகு]

கயிற்று வழி,

  • ஒற்றைக் கயிற்றுவழி,
  • இரட்டைக்கயிற்று வழி

என இருவகைப்படும்.

ஒற்றைக் கயிற்று வழி[தொகு]

ஒற்றைக் கயிற்று வழியில் இரு இடங்களுக்கு நடுவில் ஒரு நீண்ட கயிறு இருக்கும். அதன் இருமுனைகளும் இரு இடங்களில் சுமார் 8அடி விட்டமுள்ள பற்சக்கரங்கள் கொண்ட இயக்கும் உருளையில் பொருத்தப்பட்டிருக்கும். இரண்டு இடங்களுக்கும் நடுவே கம்பிகள் பொருத்தப்பட்ட பல தாங்கும் மரங்கள் இருக்கும். கம்பிகளுக்கு மேலே கயிறு செல்லும். கயிற்றில் Λ-வடிவ சேணத்துடன் கூடிய கொக்கிகள் இருக்கும். அதில் கொள்கலன்கள் தொங்கும். உருளைகள் சுற்றும் போது சராசரி மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் பளுவைத் (சுமையை) தூக்கிக் கொண்டு கயிறு இயங்கும்.

இரட்டைக் கயிறு வழி[தொகு]

இரட்டைக் கயிறு வழியில் ஒரு கயிறு நிலையானது இயங்காது. இதில் கொள்கலங்கள் தொங்கும். கொள்கலத்தை மட்டும் இழுக்கும் மற்றொரு கயிறு உண்டு. இக்கயிறு ஒற்றைக்கயிற்று வழியில் இருப்பதுபோல இயங்கும். இதில் ஒரு டன் எடையுள்ள பொருளையும் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டு செல்லலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1992, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. https://web.archive.org/web/20140808052925/http://www.seilbahntechnik.net/english.php
  2. https://web.archive.org/web/20120302175423/http://inside.mines.edu/Ropeway_Center
  3. http://www.tatever.am/en/wings-of-tatev-aerial-roadway
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயிற்றுவழி&oldid=3647832" இலிருந்து மீள்விக்கப்பட்டது