சதுப்பு மண்கொத்தி
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ சின்ன பச்சைக்காலி உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
சதுப்பு மண்கொத்தி | |
---|---|
Winter plumage | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | T. stagnatilis
|
இருசொற் பெயரீடு | |
Tringa stagnatilis (Bechstein, 1803) |
சதுப்பு மண்கொத்தி [2] எனப்படும் சதுப்பு உள்ளான் (Marsh sandpiper -- Tringa stagnatilis) ஒரு சிறிய கரைப்பறவை ஆகும். ஐரோப்பாவின் கிழக்குப் பகுதிகள் மற்றும் மத்திய ஆசியப்பகுதிகளின் ஸ்டெப்பி புல்வெளிகளிலும் டேய்கா ஈரநிலங்களிலும் இனப்பெருக்கம் செய்யும் இச்சிறிய உள்ளான்கள், பெரும்பாலும் ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் குளிர்காலங்களில் வலசை போகின்றன.
உடல் தோற்றம்[தொகு]
இது பச்சைக்கால் உள்ளானை விட சிறிய பறவை ஆகும். இது 22 முதல் 25 செமீ நீளம் உடையது. பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் நீளமான கால்களை உடையது.[2]
இனப்பெருக்க காலத்தில்[தொகு]
முன்கழுத்தில் கோடுகள் காணப்படும்; மார்பு மற்றும் மேல் பகுதிகளில் கொப்பளங்கள் போன்ற தோற்றம் கொண்ட இறக்கையும் பட்டைகளும் காணப்படும்.
இனப்பெருக்கம் அல்லா காலத்தில்[தொகு]
மேல்பாகங்கள் சாம்பல் நிறத்தில் காணப்படும்; முன்கழுத்து மற்றும் கீழ்ப்பாகங்கள் வெள்ளையாக இருக்கும்.
இளைய பறவை[தொகு]
சற்றே பழுப்பு மஞ்சள் நிற ஓரங்களுடன் மேல்பாகங்களில் கருத்த கோடுகள் காணப்படும்.
வாழ்விடம்[தொகு]
ஆறுகள், ஏரிகளை ஒட்டிய கரைப்பகுதி மற்றும் சதுப்பு நிலம் அல்லது ஈரநிலங்கள் ஆகிய பகுதிகளில் சதுப்பு மண்கொத்திகளைக் காணலாம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tringa stagnatilis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ 2.0 2.1 தென் இந்திய பறவைகள் - கிரிமிட், இன்சுகிப், மகேஷ்வரன் - பக். 98:7 - BNHS (2005)