அரித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அரித்தல் - விளக்கம்

   ஆறுகளின் முதன்மையான பணி நிலத்தை கடல் மட்டத்திற்கு ஏற்றவாறு அரித்தல் என்பதை சாலிஸ் பரி என்பவர் கூறுகிறார். பொதுவாக ஆறுகளின் அரித்தல் பணிகள் மூன்று வகைகளாகக் கொள்ளப்படுகின்றன. 

1) நிலத்தை அரித்தல் ஹ 2) பொருட்களைக் கடத்துதல் 3) பொருட்களைப் படியச் செய்தல்

பாறைகளை அரித்தல்

    ஆற்றுநீர் பாறைகளை அரித்தல் செயலானது தனித்து நிகழ்வதில்லை. இராசயன அரிப்பு, நீர்த்தாக்கம், உட்குடைவு, அரித்துத்தின்னல், மோதி உடைத்தல் ஆகிய செயல்களின் கூட்டு நடவடிக்கை காரணமாக அரித்தல் பணி நிகழ்கிறது. 

இராசயன அரிப்பு (Corrosion)

    பாறைகளிலுள்ள தாதுப் பொருட்களை ஆற்றுநீரின் இராசயனம் கரையச் செய்கிறது. இவ்வாறு சிதைவடைவது நீரின் தூய்மை மற்றும் பாறைகளின் கரை திறனைப் பொருத்தது. சுண்ணாம்புப் பாறைகள் எளிதில் கரையும் தன்மை படைத்தது. ஆனால் காப்ரோ, பல்கனப்பாறை (Slate) ஆகியவை கரைவதில்லை. 

நீர்த்தாக்கம்

     பாய்ந்தோடும் ஆற்றநீரிக் தாக்குதலால் பாறையிலுள்ள பலவீனமானப் பகுதிகள் தாக்கப்பட்டு எளிதாக உடைக்கப்ட்டு விடுகின்றன. இத்தகைய செயலுக்கு உட்பட்ட கற்கவியல்களும், பாறைகளும் வேகமாக நகர்ந்து கடத்திச் செல்லப்படுகினற்ன. 

உட்குடைவு

    ஆற்றுநீர் வேகமாகப் பாய்கின்றநபோது நீர்குமிழிகள் உடைக்கப்பட்டு நுரை பொங்குகின்றது. இவ்வாறு நீர்க்குமிழிகள் திடீரென்று உடைக்கப்படுவதால் அதில் அதிர்ச்சி அலைகள் தோன்றுகின்றன. இவை பாறைகளை நொறுக்குகின்றன. இதன் காரணமாக பாறைக் குடைவுகள் உண்டாகின்றன. இச்செயல் உட்குடைவாக்கம் எனப்படும். 

அரித்துத்தின்னல்

   ஆற்றுநீரால் அடித்து வரப்படும் பாறைத்துகள்கள் சாணைக் கற்கள் போன்றவை ஆற்றின் படுகை மற்றும் கரைகளை அரிக்கின்றன. இந்நீரில் பாறைத்துகள்கள் கலந்து செல்லும்போது நீரின் விசைக்கேற்றவாறு உராய்ந்து குடக்குடைவு மற்றும் உருண்ட பாறைகள் (Rounded boulders) உண்டாகின்றன. 

மோதி உடைத்தல் (Attrition)

   ஆற்றுநீரில் கடத்தப்படும் பாறைகள் ஒன்றோடு ஒன்று மோதி உடைகின்றன. இதனால் சிறு கற்களாக மாறுகின்றன. மேலும் இவை உருண்டைக் கற்களாக மாறுகின்றன. மேலும் இவை உருண்டைக் கற்களாக உருமாற்றம் பெறுகிறது. இறுதியில் இவை மணலாக மாற்றப்படுகிறது. மோதி உடைத்தல் செயலால்தான் பாறைகள் மணலாக மாறும் செயல் நடைபெறுகிறது. 
   இவ்வாறு ஆறுகளின் அரிக்கும் தன்மை அதன் வேகம், கன அளவு, சுமை கொண்டு செல்லும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. 

மேற்பார்வை நூல் புவிப்புறவியல் அனந்தபத்மநாபன். என்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரித்தல்&oldid=2598841" இலிருந்து மீள்விக்கப்பட்டது