ஜீன் எம். பென்னட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜீன் எம். பென்னட் (1930 - சூலை 18, 2008) அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவர் 1986 இல் அமெரிக்க ஒளியியல் குமுகாயத்தின் முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பென்னட் 1955 ஆம் ஆண்டு பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் தனது முனைவா் பட்டத்தினைப் பெற்றார், கலிபோர்னியாவில் உள்ள கடற்படை ஆயுத மையத்தில் (தற்போது கடற்படை விமான போர் மையம்) தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டார். 1983-இல் "ஒளியியல் மேற்பரப்பு தர அளவீட்டுக்கான நடைமுறை கருவிகளை உருவாக்குதல் மற்றும் ஒளியியல் தொழிற்துறைக்கான அர்ப்பணிப்புமிக்க சேவை மற்றும் வழிகாட்டல்" ஆகியவற்றிற்காக SPIE தொழில்நுட்ப சாதனையாளர் விருது பெற்றார்.

1990 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஒளியியல் குமுகாயத்திலிருந்து டேவிட் ரிச்சர்ட்சன் பதக்கம் பெற்றார். 1994 ஆம் ஆண்டில் அவர் கடற்படை ஆயுத மையத்தின் ஒரு பிரபலமான ஆய்வாளர் என்ற பெயரினை பெற்றார். 1988 முதல், ரோஸ்-ஹல்மான் தொழில்நுட்ப நிறுவனம் ஒளியியலில் சிறப்பான சேவை செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் ஜீன் பென்னட் விருது வழங்கி வருகிறது.

இவர் தனது 768வது அகவையில் 2008 சூலை 18 அன்று இறந்தார்  அப்போது அவரது வயது 78.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீன்_எம்._பென்னட்&oldid=3358044" இலிருந்து மீள்விக்கப்பட்டது