டபிள்யூ. ஏ. சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டபிள்யூ. ஏ. சில்வா
W.A.Silva
டபிள்யூ. ஏ. சில்வா
பிறப்பு(1890-01-16)சனவரி 16, 1890
வெள்ளவத்தை, இலங்கை
இறப்புமே 3, 1957(1957-05-03) (அகவை 67)
வெள்ளவத்தை, இலங்கை
பணிஇதழாசிரியர்
அறியப்படுவதுபுதின எழுத்தாளர்

டபிள்யூ. ஏ. சில்வா (வெள்ளத்தை ஆராச்சிக்கே ஆப்ரகாம் சில்வா, W. A. Silva, சனவரி 16, 1890மே 3, 1957) இலங்கையின் புகழ்பெற்ற புதின எழுத்தாளர். வால்மீகியின் இராமாயணத்தைச் சிங்கள மொழியில் மொழிபெயர்த்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

கொழும்பு, வெள்ளவத்தையில் பிறந்த சில்வா பம்பலப்பிட்டி சென். பீற்றர்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். முறைசார் கல்வியில் 5ம் வகுப்பைத் தாண்டாத இவர் பிற்காலத்தில் சிங்களம் மற்றும் சமஸ்கிருத மொழிகளை பண்டிதர் தர்மரத்ன பெலன்னே சிறீ வஜிரஞான தேரர் ஆகியோரிடம் கற்றார். அவரின் தந்தை அப்பகுதியில் பிரசித்தி பெற்ற வணிகராக விளங்கினார்.

பள்ளிப் படிப்பின் பின் சிறிது காலம் அவர் வணிக நிறுவனம் ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றினார். அதன் பின் லக்மினி பஹன எனும் பத்திரிகையில் ஆசிரியராகச் சேர்ந்தார்.

சொந்த சஞ்சிகை[தொகு]

1919ம் ஆண்டில் அவர் தமது சொந்த சஞ்சிகையை சிரிசர எனும் பெயரில் ஆரம்பித்தார். அதில் பிரதம ஆசிரியராக அவரே பணியாற்றினார். 1940ம் ஆண்டில் நுவண எனும் பெயரில் சஞ்சிகையையும் 1949ம் ஆண்டில் திலக்கா என்ற பெயரில் ஒரு சஞ்சிகையையும் வெளியிட்டார்.

முதலாவது புதினம்[தொகு]

அவர் தனது முதலாவது புதினத்தை சிறியலதா எனும் அனாதை யுவதி என்ற தலைப்பில் 1909ம் ஆண்டு வெளியிட்டார். அச்சமயம் அவருக்கு 19 வயதே நிரம்பியிருந்தது. அன்று தொட்டு 1961ம் ஆண்டுவரை 25 புதினங்களை எழுதியுள்ளார். சிறியலதா லக்சுமி, ஹிங்கன கொல்லா, பாசல் குருவரீ, கெலே ஹந்த, சுனேத்ரா, தைவயோகய, விஜயபா கொள்ளய, ரதலபில ருவ ஹந்தபான, ஜுலிஹத்த ஆகியன அவரின் சில புதினங்களாகும்.

பிற துறைகள்[தொகு]

அத்துடன் வரலாறு சமூக, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு மற்றும் பொதுவிடயங்கள் என பல்வேறு துறைகளில் அவர் தமது கவனத்தைச் செலுத்தினார். தெய்யங்கே ரடே, கதாரத்னாகரய, லேஞ்சுவ, சக்விதி, ரஜ தலகுமாரி ஆகியன அவரின் சிறுகதை தொகுப்புகளாகும். அத்துடன் த அராபியன் நைட்ஸ் (The Arabian nights) எனும் நூலையும் சிங்கள மொழியில் மொழிபெயர்த்ததுடன், மாயா யோகய எனும் நாடகத்தையும் எழுதினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டபிள்யூ._ஏ._சில்வா&oldid=1367184" இலிருந்து மீள்விக்கப்பட்டது