பென்டாஎரித்ரிட்டோல் டெட்ராநைட்ரேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பென்டாஎரித்ரிட்டோல் டெட்ராநைட்ரேட் (Pentaerythritol tetranitrate) சுருக்கமாக (PETN), பெண்ட், பெந்தா, டிஇஎன், கொர்பெண்ட், பென்தரைட் என்றும் (அல்லது அரிதாக, ஜேர்மனியில் முதன்மையாக nitropenta), எனப்படுவது ஒரு வேதிப்பொருளாகும். இது நைட்ரோகிளைசெரின், நைட்ரோசெல்லுலோஸ் குடும்பத்தை சேர்ந்தது, மேலும் இது நைட்ரோகிளிசரினுடன் அமைப்பு ரீதியாக மிகவும் ஒத்ததாக உள்ளது. பெண்டா என்பது ஐந்து கரிம அணுக்களை குறிக்கிறது.

இது மிகவும் சக்தி வாய்ந்த வெடிபொருட்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இதை பிளாஸ்டிக்ஸுடன் கலக்கும் போது, வெடிக்கும்.[1]

இது இரத்தநாள விரிவூக்கி மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது, மேலும் மார்பு நெரிப்பு போன்ற இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.[2][3]

வரலாறு[தொகு]

ஜெர்மனி வெடிபொருள் உற்பத்தி நிறுவனமான ரெயின்ஸ்-வெஸ்ட்ஃபிலிஸ் ஸ்ப்ரங்க்ஸ்டாப் ஏ.ஜி என்ற நிறுவனத்தால் இந்த வெடிபொருள் முதல்முதலில் 1894 இல் தயாரிக்கப்பட்டது.[4][5][6][7] இதன் உற்பத்தி 1912 இல் தொடங்கி, ஜேர்மன் அரசாங்கத்திடம் காப்புரிமையும் பெறப்பட்டது. முதல் உலகப் போரில் ஜெர்மன் இராணுவத்தால் PETN பயன்படுத்தப்பட்டது.[8][9]

பயன்பாடு[தொகு]

முதல் உலகப் போருக்கு பிறகு இந்த வெடிபொருள் வணிக ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஆபத்தான வெடிபொருளாக இருப்பதால் இதன் விற்பனைக்கு பல்வேறு நாடுகள் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. எனினும் கள்ளச் சந்தையில் இது விற்கப்படுகிறது. படைத்துறை மற்றும் சுரங்கத் தொழிலில் பிஇடிஎன் சட்டப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. இதை எக்ஸ்ரே மற்றும் பிற பாரம்பரிய உபகரணங்களால் கண்டறிவது கடினம் என்பதால். பாதுகாப்பு சோதனைகளை கடந்து விடுவது எளிது என்பதால், தீவிரவாதிகள் இதை பயன்படுத்துகின்றனர். 2011 இல் தில்லி உயர் நீதிமன்றத்தில் 17 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிஇடிஎன் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Childs, John (1994). "Explosives". A dictionary of military history and the art of war. ISBN 978-0-631-16848-5. 
  2. "New Drugs". Can Med Assoc J 80 (12): 997–998. 1959. பப்மெட்:20325960. 
  3. Ebadi, Manuchair S. (1998) (Google Books excerpt). CRC desk reference of clinical pharmacology. பக். 383. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-9683-0. https://books.google.com/books?id=-EAxShTKfGAC&pg=PA383. 
  4. Deutsches Reichspatent 81,664 (1894)
  5. Thieme, Bruno "Process of making nitropentaerythrit," U.S. patent no. 541,899 (filed: November 13, 1894 ; issued: July 2, 1895).
  6. Krehl, Peter O. K. (2009) History of Shock Waves, Explosions and Impact.
  7. Urbański, Tadeusz; Ornaf, Władysław and Laverton, Sylvia (1965) Chemistry and Technology of Explosives, vol. 2 (Oxford, England: Permagon Press. p. 175.
  8. German Patent 265,025 (1912)
  9. Stettbacher, Alfred (1933). Die Schiess- und Sprengstoffe (2. völlig umgearb. Aufl. ). Leipzig: Barth. பக். 459. 
  10. "உ.பி. சட்டப்பேரவையில் சக்திவாய்ந்த வெடிபொருள் தீவிரவாதிகளின் முதல் தேர்வு பிஇடிஎன் என்ஐஏ விசாரிக்க பேரவை பரிந்துரை". செய்திக்கட்டுரை. தி இந்து. 15 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 15 சூலை 2017.