பொட்டாசியம் எக்சாகுளோரோபிளாட்டினேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் எக்சாகுளோரோபிளாட்டினேட்டு
Potassium hexachloroplatinate
இனங்காட்டிகள்
16921-30-5 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61856
வே.ந.வி.ப எண் TP1650000
SMILES
  • Cl[Pt-2](Cl)(Cl)(Cl)(Cl)Cl.[K+].[K+]
பண்புகள்
K2PtCl6
வாய்ப்பாட்டு எடை 485.99 கி/மோல்
தோற்றம் ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த திண்மம்
அடர்த்தி 3.344 கி/செ.மீ3
உருகுநிலை 250 °C (482 °F; 523 K) (சிதைவடையும்)
0.89 கி/100மி.லி H2O (at 25 °C) [1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Oxford MSDS
ஈயூ வகைப்பாடு நஞ்சு (T)
தீப்பற்றும் வெப்பநிலை 250 °C (482 °F; 523 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் டெட்ராகுளோரோபிளாட்டினேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பொட்டாசியம் எக்சாகுளோரோபிளாட்டினேட்டு (Potassium hexachloroplatinate) என்பது K2PtCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறத்துடன் காணப்படும் இச்சேர்மம் கரையாத பொட்டாசியம் உப்புக்கு ஒரு உதாரணமாகும். எக்சாகுளோரோபிளாட்டினேட்டு(IV) ஈரெதிர்மின் அயனியாக இவ்வுப்பு எண்முக ஒருங்கிணைவு வடிவமைப்புடன் தோற்றமளிக்கிறது.

பருமனறி பகுப்பாய்வில் எக்சாகுளோரோபிளாட்டினிக் அமிலக் கரைசலிலிருந்து இச்சேர்மத்தை வீழ்படிவாக்கும் முறையே முன்னர் பொட்டாசியத்தை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது [2] . மேலும் பிளாட்டினக் கழிவுகளிலிருந்து பிளாட்டினத்தை மீட்டெடுக்கவும் ஒரு இடைநிலைச் சேர்மமாக பொட்டாசியம் எக்சாகுளோரோபிளாட்டினேட்டு பயன்படுகிறது [3].

ஐதரசீன் டையைதரோகுளோரைடால் இச்சேர்மத்தை ஒடுக்கி தொடர்புடைய டெட்ராகுளோரோபிளாட்டினேட்டு உப்பைப் பெறலாம் [4][5].

மேற்கோள்கள்[தொகு]

  1. Grinberg, A. A.; Sibirskaya, V. V. (1967). "Solubility of hexammine and hexahalo platinum(IV) complexes". Zhurnal Neorganicheskoi Khimii 12: 2069–2071. 
  2. G. F. Smith; J. L. Gring (1933). "The Separation and Determination of the Alkali Metals Using Perchloric Acid. V. Perchloric Acid and Chloroplatinic Acid in the Determination of Small Amounts of Potassium in the Presence of Large Amounts of Sodium". J. Am. Chem. Soc. 55 (10): 3957–3961. doi:10.1021/ja01337a007. 
  3. George B. Kauffman, Larry A. Teter "Recovery of Platinum from Laboratory Residues" Inorganic Syntheses, 1963, volume 7, pp. 232-236. எஆசு:10.1002/9780470132388.ch61
  4. George B. Kauffman, Dwaine A. Cowan "cis- and trans-Dichlorodiammine Platinum(II)" Inorganic Syntheses, 1963, volume 7, pp. 239. எஆசு:10.1002/9780470132388.ch63
  5. Keller, R. N.; Moeller, T. (1963). "Potassium Tetrachloroplatinate(II)". Inorg. Synth.. Inorganic Syntheses 7: 247–250. doi:10.1002/9780470132333.ch79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-13233-3.