ஆலன் ஜான்ஸ்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலன் ஜான்ஸ்டன்
பிறப்பு17 மே 1962 (1962-05-17) (அகவை 61)
லிண்டி, தங்கனீக்கா
கல்விஆங்கிலம் மற்றும் அரசியலறிவியலில் முதுகலைப்பட்டம், டன்டி பல்கலைக்கழகம்
இதழியல் கல்வியில் பட்டயப்படிப்பு கார்டிஃப் பல்கலைக்கழகம்.
பணிஊடகவியலாளர்
பெற்றோர்கிரஹாம் மற்றும் மார்கரெட் ஜான்ஸ்டன்

ஆலன் கிரஹாம் ஜான்ஸ்டன் (Alan Graham Johnston) (பிறப்பு 17 மே 1962) என்பவர் பிரித்தானிய ஊடகவியலாளர் ஆவார். இவர் பிபிசி ஊடகத்திற்காக வேலைபார்ப்பவர். இவர் உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், காசா நில பரப்பு, இத்தாலி ஆகிய இடங்களில் பிபிசி நிருபராகப் பணியாற்றியுள்ளார். இவர் அடிப்படையில் இலண்டன் வாசி ஆவார்.

இவர் 12 மார்ச் 2007 இல் பாலஸ்தீனிய தீவிரவாதிகளின் ஒரு குழுவினரால் கடத்தப்பட்டார் பின் நான்கு மாதங்கள் கழித்து ஜூலை 4 இல் விடுதலை செய்யப்பட்டார்.

தொடக்க கால வாழ்க்கை[தொகு]

ஜான்ஸ்டன் தற்போதைய தன்சானியா மற்றும் அந்நாளைய தங்கனீக்காவின் லின்டியில் இசுக்காட்டியப் பெற்றோருக்குப் பிறந்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fears for BBC Gaza correspondent". BBC. BBC. பார்க்கப்பட்ட நாள் 10 July 2022.
  2. Raymond Hainey (16 April 2007). "The 'very grounded' journalist who won acclaim for his work in world's war zones". The Scotsman இம் மூலத்தில் இருந்து 5 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130105071216/http://thescotsman.scotsman.com/international.cfm?id=580572007. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_ஜான்ஸ்டன்&oldid=3602143" இலிருந்து மீள்விக்கப்பட்டது