மோட்டார் வாகனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோட்டார் வாகனங்கள்

மோட்டார் வாகனங்கள்[தொகு]

எந்திரத்தால் வாகனங்களை ஓட்டவேண்டுமென்ற முயற்சி நெடுங்காலமாக இருந்துவந்தது. கியூனாட் (Cugnot) என்ற பிரெஞ்சு தளபதி 1770-ல் பீரங்கி வண்டியை இழுத்துச் செல்ல ஓர் எந்திரத்தை அமைத்தார். அது நீராவியால் இயங்கும் எந்திரம். அதைத் தொடர்ந்து நீராவி எந்திர வண்டிகள் தோன்றலாயின. ஆனால் அவற்றால் வேகமாகச் செல்ல முடியாது; நீராவி எந்திரம் பெரிதாகவும் இருந்தது. ஆகவே ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா முதலிய நாடுகளில் பலர் இந்த எந்திரத்தைத் திருத்தி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பெட்ரோலிய எண்ணெயால் இயங்கும் எந்திரம் 1860-ல் அமைக்கப்பட்டது. இதை காரில் பொருத்தி ஓட்டத் தொடங்கினர். இந்த எந்திரத்தை அமைத்ததில் ஜெர்மானியைச் சேர்ந்த ஆட்டோ (Otto), டேம்லர் (Daimler),குலுகார்ஜியா (GluGörgio) ,பென்ஸ்(Benz),காகர்ஃப் (gâGurf) முக்கியமானவர்கள். இவர்களுள் பென்ஸ் 1887 முதல் கார்களை உற்பத்தி செய்து விற்கத் தொடங்கினார். டன்லப் (Dunlop) என்ற அமெரிக்கர் 1888-ல் காற்றடைத்த சக்கரங்களைக் காரில் பொருத்தி ஒட்டு வதற்கும் வழி கண்டார். கார் உற்பத்தி முறைக்கு உதவிய மற்றோர் அமெரிக்கர் "போர்டு" (Ford, த.க.). இவர் 1903-ல் தம் மோட்டார் நிறுவனத்தை அமைத்தார். காரின் அமைப்பைச் சீர்திருத்தி உற்பத்தி முறையில் புதிய வழிகளைக் கையாண்டு, குறைந்த விலையில் இவர் கார்களை விற்கத் தொடங்கினார்.
முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு காரின் அமைப்பிலும் உற்பத்தியிலும் பெரும் முன்னேற்றம் ஏற்படலாயிற்று. இப்போது ஒவ்வோராண்டும் புதுப்புது வடிவங்களில் கார்களைத் தயாரித்து வருகின்றனர். அவ்வப்போது உறுப்புக்களிலும் முன்னேற்றமான பல மாறுதல்களைச் செய்து வரு கிறார்கள். கார்களில் பல வசதிகளும் உள்ளன. வானொலி, தொலைபேசிமுதலிய சாதனங்களைக் காரில் பொருத்திக் கொள்ளலாம். காற்றுப் பதனாக்கம் (Air Condition) செய்யப்பட்ட கார்களும் உள்ளன. பந்தயத்திற்கெனத் தனிவகைக் கார்கள் உண்டு. இன்று இந்தியாவில் டில்லி, கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய இடங்களில் மோட்டார் கார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. காரில் ஆயிரக்கணக்கான உறுப்புகள் உள்ளன. இவற்றுள் மிக முக்கியமானது எஞ்சின். இது உள்ளெரி எஞ்சின் (த.க.) வகையைச் சேர்ந்தது. பெட்ரோலிய எண்ணெயும் காற்றும் கலந்த கலவையை எரிக்கச் செய்து, கார் இயங்குவதற் கான சக்தியை இந்த எஞ்சின் உண்டாக்கு கிறது. பஸ், லாரி முதலியவற்றிலும் சிலவகைக் கார்களிலும் டீசல் எண்ணெய் எரிபொரு ளாகப் பயன்படுகிறது. மோட்டார் வண்டி களை ஒட்டுவதற்கு நல்ல பயிற்சி பெற்றுப் பின்னர் அதற்கான உரிமத்தையும்(Licence) பெற வேண்டும். உரிமம் இன்றி மோட்டார் வண்டிகளை ஒட்டுவது சட்டப்படி குற்றமாகும்.

[1]

  1. https://en.wikipedia.org/wiki/Motor_vehicle
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோட்டார்_வாகனங்கள்&oldid=3600801" இலிருந்து மீள்விக்கப்பட்டது