தோல்வி மனப்பான்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோல்வி மனப்பான்மை என்பது தோல்வியை போராடாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். இது அடுத்தடுத்து வருகின்ற எதிர்மறை தாத்பரியத்தை கொண்டுள்ளது. இதனை உளவியலில் நம்பிக்கையில்லாத குணத்துடன் தொடர்புபடுத்தலாம்.

வரலாறு[தொகு]

தோல்வி மனப்பான்மை என்ற சொல் பொதுவாக அரசியலில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சித்தாந்த நிலைப்பாட்டிலிருந்து விளக்கமளிக்கும்போது, இதை எதிர்கட்சியோடு ஒத்துழைப்பு நல்குவதாக கருதலாம். இராணுவச்சூழலில் பார்க்கும்போது, போர்க்காலங்களில், குறிப்பாக போரிடப்போவதற்கு முன்பாக, தோல்வி மனப்பான்மையை “தேசத்துரோகத்துடன்” ஒப்பிடப்படுகிறது.

தோல்வி மனப்பான்மையுடையவனாக ஒரு இராணுவ வீரன் இருந்துகொண்டு, தனது சித்தாந்த மதிப்புடைய தேசக்கொள்கையை சந்தேகித்து, குரல் எழுப்பி, போரிட மறுக்கும்போது அவனை இராணுவச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தலாம். அதாவது தொடர்ந்திருக்கும் வினாக்களான “போரானது முன்பே தோற்றுப்போனதா?” மற்றும் “சண்டையானது நாம் படும் பிரயத்தனத்திற்கு தகுமா?” போன்ற வினாக்கள் மூலம் எழும் தோல்வி மனப்பான்மையானது, இராணுவ வெற்றியைவிட, போர்முடிவிற்கான மாற்றுவழியென மறைபொருளாக ஆலோசனை வழங்குகிறது.

தோல்வி மனப்பான்மையுடைய பல தளபதிகளை இரண்டாம் உலகப்போரின்போது, அடல்ஃப் ஹிட்லர் திடீரென வேலையிலிருந்து வெளியேற்றினார். போரின் இறுதியாண்டில் ஜெர்மன்மக்கள் நீதிமன்றம்” நாடுமுழுவதும், விளம்பர பலகைகளில் அவர்களை கண்டித்து, அவர்களின் பெயர், பேச்சு, செயல்கள் அடங்கிய இளம்சிவப்புநிற சுவரொட்டிகளை வாரந்தோறும் ஒட்டியது.

மேற்கோள்[தொகு]

  1. H.W. Koch: In the Name of the Volk: Political Justice in Hitler's Germany. I.B. Tauris, 1997. ISBN 1860641741 pp. 228
  2. http://dictionary.reference.com/browse/defeatism. Retrieved 2014-03-13
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்வி_மனப்பான்மை&oldid=3688464" இலிருந்து மீள்விக்கப்பட்டது