ஜெயந்தி பட்நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயந்தி பட்நாயக்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1980-1989 மற்றும் 1998-1999
முன்னையவர்ஜானகி பல்லப் பட்நாயக்
பின்னவர்சிறீகாந்த் சேனா
தொகுதிகட்டக் மற்றும் பெர்காம்பூர்
நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னையவர்பி. வி. நரசிம்ம ராவ்
பின்னவர்ஆனந்தி சரண் சாகு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 ஏப்ரல் 1932 (1932-04-07) (அகவை 91)[1]
அசிகா, கஞ்சாம் மாவட்டம், ஒடிசா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

ஜெயந்தி பட்நாயக் (Jayanti Patnaik) (பிறப்பு 1932) ஒரு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற சமூக சேவகரும் ஆவார்.[2] மகளிர் தேசிய ஆணையத்தின் முதல் தலைவரான இவருடைய பதவி காலம் 3 பிப்ரவரி 1992 முதல் 30 ஜனவரி 1995 வரை இருந்தது.[3][4][5]

ஆரம்ப கால வழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ஒரிசாவின் கஞ்சாம் மாவட்டத்தில் அசிகா என்னுமிடத்தில் 1932 இல் நிரஞ்சன் பட்நாயக் என்பவருக்கு மகளாக பிறந்தார். அசாரா ஹரிஹர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். கடக்கிலுள்ள உட்கல் பல்கலைக்கழகத்தின் கீழ் சயலாபால மகளிர் கல்லூரியில் சமூகப் பணியில் கலையியல் நிறைஞா் பட்டம் பெற்றார். பின்னர், மும்பையின் டாட்டா சமூக அறிவியல் கழகத்தில் மேற்படிப்பு படித்தாா்.

1953 ஆம் ஆண்டில் அரசியல்வாதியும் ஒடிசாவின் முதலமைச்சராக (1980-89) இருந்தவருமான ஜானகி பல்லப் பட்நாயக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. Ranjan, Rashmi (28 September 2022). "Jayanti Patnaik, wife of former Odisha CM Janaki Ballabh Patnaik, passes away" (in English). Odisha TV இம் மூலத்தில் இருந்து 28 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220928180046/https://odishatv.in/news/miscellaneous/jayanti-patnaik-wife-of-former-odisha-cm-janaki-ballabh-patnaik-passes-away-186609. 
  2. Biographical Sketch: Member of Parliament, 12th Lok Sabha பரணிடப்பட்டது 12 சனவரி 2014 at the வந்தவழி இயந்திரம் Parliament of India
  3. "Jayanti Patnaik" (PDF). School of Media and Cultural Studies, Tata Institute of Social Sciences, Mumbai. Archived from the original (PDF) on 2 April 2014. பார்க்கப்பட்ட நாள் 15 March 2016.
  4. "Brief History". National Commission for Women. Archived from the original on 22 March 2016. பார்க்கப்பட்ட நாள் 15 March 2016.
  5. "List of chairpersons of NCW". National Commission for Women. Archived from the original on 6 February 2014. பார்க்கப்பட்ட நாள் 15 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயந்தி_பட்நாயக்&oldid=3722608" இலிருந்து மீள்விக்கப்பட்டது