சொல் அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொல் அணி ஆறு வகைப்படும். அவையாவன: எதுகை, மோனை, சிலேடை, மடக்கு, பின்வருநிலை, #00BB00

எதுகை[தொகு]

செய்யுளில் அல்லது வசனத்தில் இரண்டாவது எழுத்து ஒழுங்குபடத் தொகுக்கப்பட்டிருப்பது. அல்லது செய்யுட் சீர்களின் இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது.
உதாரணம்

ட்டகத்தைக் கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
ட்ட வட்டப் பொட்டுக்காரி

மோனை[தொகு]

செய்யுளில் அல்லது வசனத்தில் முதலாவது எழுத்து ஒழுங்குபடத் தொகுக்கப்பட்டிருப்பது.
உதாரணம்

ட்டோடு குழலாட
ண்ணென்ற மீன் ட ஆட
பொட்டோடு கையாட ஆட
பெண்ணென்ற நீயாடு ஆடு


சிலேடை[தொகு]

ஒரு சொற்றொடரை வேறுவேறு இடங்களில் பிரிக்கும் போது வெவ்வேறு பொருள் தருவது.
உதாரணம்

ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலைதனுக்கு நாணாது
இச் செய்யுளில்
ஒரு கருத்து:
நாய் ஓடும். இருக்கும். அதன் வாயின் உட்பக்கம் வெள்ளையாக இருக்கும். சாப்பாட்டை நாடும்.
குலைப்பதற்கு நாணாது என்று வரும்.

மறு கருத்து

தேங்காய்க்கு ஓடு இருக்கும். உட்பக்கம் வெள்ளையாக இருக்கும்
குலை போட நாணாது. நாடும்- மனிதர்களால் விரும்பப் படும் என்று வரும்.

இங்கு ஒரு செய்யுள் இரு வேறு பொருள்களைத் தருகிறது.
தனியாக ஒரு சொல்லைப் பார்க்கும் போது

அறிவில்லாதவன்

அறிவில்+ஆதவன்
அறிவு+இல்லாதவன் என இருபொருள்களைத் தருகின்றன.

மடக்கு[தொகு]

ஒரு சொற்றொடரில் தொடர்ந்து வரும் சொல் ஒன்றாக இருக்கும். ஆனால் பொருள் வேறுபடும்.
உதாரணம்

அரவம் அரவம் அறியுமா?
இதன் பொருள்
பாம்பு சத்தம் அறியுமா.
ஒரு அரவம் பாம்பையும், ஒரு அரவம் சத்தத்தையும் குறிக்கின்றது.

பின்வருநிலை[தொகு]

ஒரே சொல் அடுத்தடுத்து ஒரே பொருளில் வருவது
உதாரணம்

நோய் எல்லாம் நொய் செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டுபவர் இதன் பொருள்:
துன்பம் இல்லாமல் வாழ விரும்புகின்றவர் துன்பம் செய்ய மாட்டார். ஏனெனில் அத்துன்பம் செய்வோரையே சாரும் என அறிந்துள்ளனர்.
இங்கு நோய் என்பது துன்பத்தைக் குறிக்கிறது.

நோய் என்ற ஒரே சொல் மீண்டும் மீண்டும் அதே பொருளில் வருகிறது.

அந்தாதி[தொகு]

பாடலில் ஒரு வசனத்தில் முடியும் சொல் அடுத்த வசனத்தில் தொடக்கமாக வருவது.
உதாரணம்

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொல்_அணி&oldid=3083879" இலிருந்து மீள்விக்கப்பட்டது