சௌத் இந்தியா விஸ்கோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சௌத் இந்தியா விஸ்கோஸ் (South India Viscose) நிறுவனம் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் அருகில் உள்ள சிறுமுகையில் இத்தாலி நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் துவங்கப்பட்டது. இது நீலகிரி மாவட்டத்தில் காணப்படும் யூகலிப்டஸ் மரத்தின் கட்டைகளைப் பயன்படுத்தி, பல கட்ட பணிகளுக்குப்பின் அதிலிருந்து நூல் எடுக்கும் தொழிற்சாலையாக விளங்கியது. இதில் சுமார் 3000 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்தனர்.இதன் தலைமை செயலகம் கோவையில் அமைந்துள்ளது.[1][2]

இந்நிறுவனத்தில் பல்ப் எனப்படும் ஆரம்பகட்ட பொருளும், விஸ்கோஸ் என்ற வேதியியல் பொருளைப்பயன்படுத்தி உருவாக்கப்படும் நூலிழைகளும் உற்பத்தி செய்யப்பட்டன.விஸ்கோஸ் நூல் இன்று துணி தயாரிப்பில் ஒரு முக்கியமான பகுதிப்பொருளாகும். மேலும் தாவர எண்ணெய் உற்பத்தி செய்யும் இடமாகவும் இருந்தது.

2001 ஆம் ஆண்டில் இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பவானி ஆற்றில் கலந்து நதி நீர் மாசுபட்டதால், மக்களின் பலகட்ட போராட்டங்களுக்குப்பின் நிறுத்தப்பட்டது. இதனால் அதில் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களும் வேலை இழந்தனர். இதன் பின் இந்நிறுவனம் அரசாங்கத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் இருந்த விலைமதிப்பான பொருள்கள் களவாடப்பட்டன. இந்நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் இன்று விஜயலஷ்மி அறக்கட்டளையினரால் நடத்தப்படுகிறது. முறையான பராமரிப்பின்றி இந்நிறுவனம் பாழடைந்து உள்ளது. இந்நிறுவனம் 2005 ஆம் ஆண்டிலிருந்து முறையாக நிறுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.listofcompanies.co.in/2012/03/12/siv-industries-limited/
  2. https://www.emis.com/php/company-profile/IN/SIV_Industries_Ltd_en_1628724.html[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌத்_இந்தியா_விஸ்கோஸ்&oldid=3584661" இலிருந்து மீள்விக்கப்பட்டது