பஞ்சாயத்து ராஜ் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றடுக்குப் பஞ்சயத்து ராஜ் அமைப்பில் அமைப்பில் மாவட்ட ஊராட்சி (நீல நிறத்தில்), ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகள் (ஊதா நிறத்தில்)

பஞ்சாயத்து ராஜ் சட்டம் என்பது உள்ளாட்சி அமைப்புகளின் தங்களின் தேவைகளை வளர்ச்சியைத் திட்டமிட்டு நிறைவேற்றிக் கொள்ளும் சட்ட அமைப்பு ஆகும். ராஜிவ் காந்தி அவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் ஆண்டு திரு.நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் 1992 ஏப்ரல் 24 ம் நாள் உருவாக்கப்பட்டது.இந்திய அரசியலமைப்பு சட்டம் 73,74,திருத்தங்களால் பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்றப்பட்டது.[1]


பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூன்று அடுக்குகளுடன் கூடியது. 1 மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சியும், 2 வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் 3 கிராம அளவில் கிராம ஊராட்சிகள் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

சோழர் கால உத்திரமேரூர் கல்வெட்டு மூலம் குடவோலை முறையின் மூலம்தேர்வு செய்து கிராம சபை,மற்றும் வாரியம் பற்றியும்,1882 இல் ரிப்பன் பிரபு காலத்தில் தல சுய ஆட்சி திட்டம்  மூலம் பஞ்சாயத்துச் சட்டம் பற்றி அறிய முடிகிறது.

பஞ்சாயத்து ராஜ் சட்ட சிறப்புகள்[தொகு]

கிராமம்,ஒன்றியம்.மாவட்ட.அளவில் அதிகாரப் பரவல் உள்ளது. 1/3பங்கு உறுப்பினர்கள் பெண்களாக இருப்பர். கிராமம்,ஒன்றியம்,மாவட்டம் என மூன்றடுக்கு கொண்டது. நகர்பாலிகா பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சி என முன்றடுக்கு கொண்டது. 29 வகையான நலத்திட்டங்களை ஆற்ற உரிமை உள்ளது. கிராமசபை ஆண்டிற்கு நான்கு முறை கூட்ட வேண்டும்.

பணிகள்[தொகு]

சாலை வசதி, குடிதண்ணீர்,தெருவிளக்கு,சுகாதாரம்,கல்வி, நூலகம், துப்புரவு,பூங்கா, பதாள சாக்கடை போன்ற பராமரிப்புப் பணிகளை செய்கின்றன. கிராம சபை கூடி வரவு செலவு ,திட்டம் பற்றி விவாதித்தல். மத்திய,மாநில நிதிபெற திட்டம் தாயாரித்தல்.

பஞ்சாயத்து நிதிக்கமிஷன்[தொகு]

5 உறுப்பினர்களைக் கொண்டது. நிதிக்கொள்கை, நிதிஆதாரம், நிதிப் பங்கீடுபோன்ற ஆலோசனை வழங்குதல்.

நிதி ஆதாரம்[தொகு]

வீட்டு வரி,கேளிக்கை வரி, தொழில் வரி, சொத்துவரி, குடிநீர் வரி,விளம்பர வரி,வசூலித்தல் மத்திய, மாநில அரசு நிதி அளிப்பு

மாவட்ட ஆட்சியர் அதிகாரம்[தொகு]

உள்ளாட்சி அமைப்புக்களை ஆய்வு செய்ய, கண்காணிக்க,மற்றும் சட்ட விரோதப்போக்கு, குற்றப்பின்னணி போன்ற நேரங்களில் தலைவரை நீக்க அதிகாரம் உண்டு.

மேற்கோள்[தொகு]

  1. உள்ளாட்சி அமைப்புகள். தமிழ்நாடு பாடநூல் கழகம். 2008. பக். 92. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாயத்து_ராஜ்_சட்டம்&oldid=3622086" இலிருந்து மீள்விக்கப்பட்டது