கோயம்புத்தூர் முற்றுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயம்புத்தூர் முற்றுகை (Siege of Coimbatore) என்பது தென்னிந்தியாவின் கோயம்புத்தூர் கோட்டையை பிடித்திருந்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கோட்டை காவல் படை மற்றும் திருவாங்கூர் படைகளை எதிர்த்து மூன்றாம் ஆங்கில-மைசூர் போரின்[1] போது மைசூர் இராச்சியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கை ஆகும். 1791 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய இம்முற்றுகைப் போரில் கோட்டையைத் தகர்க்க மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி சூன் மாதம் 11 ஆம் நாள் முறியடிக்கப்பட்டது. அதன் பின்பு படைத் தளபதி யான் சால்மெர்சு தலைமையில் கோட்டை காவல் படை வலுப்படுத்தப்பட்டது, பின்னர் மைசூரின் பெரும் படைகள் வரவழைக்கப்பட்டு கோட்டையை எதிர்த்து போர் தொடுக்கப்பட்டது. இறுதியில் கோட்டை காவல் படை நவம்பர் 2- ஆம் நாளில் சரணடைந்தது. சரணடையும் விதிகளுக்கு எதிராக திப்பு சுல்தான் கோட்டை தளபதிகளை சிறைப்பிடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. பக். 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131300343. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயம்புத்தூர்_முற்றுகை&oldid=3845230" இலிருந்து மீள்விக்கப்பட்டது