சங்க இலக்கியத்தில் பறவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்க இலக்கியத்தில் பறவைகள் பற்றிக் காணலாகும் குறிப்புகளை இக்கட்டுரை வழங்குகிறது. இன்றைய காலகட்டத்தில் உள்ளதைப் போல சுற்றுச் சூழல் விழிப்புணர்வோ அறிவியல் வளர்ச்சியோ, இல்லாத காலத்தில் தமிழர்களின் வாழ்க்கையில் இருந்து இயற்கை கூறுகள் பிரிக்க முடியாதனவாக இருந்து வந்திருக்கின்றன.

வலசை போதல்[தொகு]

பறவையினங்கள் வலசை போதல் 40 விழுக்காடு முதல் 50 விழுக்காடு பறவைகள் வலசை போகக் கூடியவை. உணவுத் தேவைக்கும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதற்கும் தேவையான தகுந்த தட்ப வெப்ப நிலைகளைத் தேடியும் வருகின்றன. ஒவ்வொரு வருடமும் குளிர்காலங்களில் மேற்கத்திய நாடுகளில் இருந்து கிழக்கில் உள்ள வெப்ப வலய நாடுகளுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பல ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டி வருவது வலசை போதல் ஆகும். இதனை பறவைகளின் புலப்பெயர்வு என்றும் அழைக்கலாம்.

தமிழ் இலக்கியத்தில் பறவைகள்[தொகு]

பறவைகள் வலசை போதல், கூடு கட்டுதல், இனப்பெருக்கம் செய்தல், உணவு உள்ளிட்டவை பற்றி ஆராய்ச்சி செய்வது ஒரு நவீன காலப்பழக்கம். இத்துறை [1] கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் வரலாறு கொண்டது. ஆனால் இது தொடர்பான குறிப்புகள் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. பண்டைத் தமிழர்கள் இவற்றை கிமு 3-ஆம் நூற்றாண்டில் எழுதிய சங்க இலக்கியத்தில் விரிவான விவரிப்புகளுடன் காணப்படுகின்றன. [2] இதற்கு மிகச்சிறந்த எடுத்துகாட்டு சக்திமுற்றப் புலவரின் நாராய், நாராய் எனத் தொடங்கும் சங்கப்பாடல்.[3]

செங்கால் நாரை


“நாராய், நாராய், செங்கால் நாராய்,


புழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!

நீயும் நின்பெடையும் தென்திசைக் குமரி ஆடி

வடதிசைக்கு ஏகுவீர; ஆயின், எம்மூர்”

சத்திமுத்தம் வாவியுள் தங்கி…

என்று போகிறது.


இந்தச் செய்யுள் வரிகளில் சிவப்பு கால்கள், பவளச் சிவப்பு நிறத்துடன் பனங்கிழங்கைப் பிளந்ததுபோல நீண்டு காணப்படும் அலகைப் பற்றி புலவர் விவரிக்கிறார். இந்தக் குறிப்புகளைக் கொண்டு பார்க்கும்போது புலவர் குறிப்பிடும் பறவை செங்கால் நாரை – (WHITE STORK) என்று தெளிவாகப் புரிகிறது. அப்புலவர் அதை வர்ணிப்பது மட்டுமின்றி, அப்பறவையின் இடப்பெயர்வுப் பண்புகளையும் புலவர் காட்சிப்படுத்தியுள்ளார்.

புறநானூற்றில் பறவைகள்[தொகு]

பூநாரை[தொகு]

பூநாரை

சங்க இலக்கியமான புறநானூற்றில் 67 ஆவது பாடலில் பிசிராந்தையாரர், கோப்பெருஞ்சோழன் பாடாண் திணையின் மூலம் பாடிய பாடல்.


“அன்னச் சேவல்! அன்னச் சேவல்!

ஆடுகொள் வென்றி அடுவோர;

அன்னல்” எனத் தொடங்கும் பாடலில் அன்னச் சேவல் எனப் பூநாரைகள் (FLAMINGO) பற்றிய குறிப்புகள் வருகிறது. உலகெங்கும் வியக்கும் பூநாரைகளின் உணவுப்பழக்கம், வலசை போதல் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குமரி அம் பெருந்துறை அயிரை மாந்நி வடமலை பெயர்குவை ஆயின். . . .

குமரி நீர்நிலைகளில் காணப்படும் அயிரை மீனை உண்டு நீ வடக்கில் உள்ள இமயமலைக்கு வலசை போகிறாய் என்று இச்செய்யுள் உணவு பழக்கத்தையும் வலசை பண்பினையும் குறிப்பிடுகிறது.

அகநானூற்றில் சாம்பல் கொக்கு(eastern grey heron) தமிழ்நாட்டில் உள்ள வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிளி புகலிடங்களில் இந்தப்பறவை பெருமளவில் இனப்பெருக்கம் செய்கிறது. [4] [5]

ஆழமில்லாத நீர்நிலைகளில் கொக்குகள் (egret) வேகமாக நகர்ந்து இரையை தேடும். அதற்கு நேர்மாறாக சாம்பல் கொக்குகள் நுட்பமாகப் பதுங்கி நகரக் கூடியவை. மிக மெதுவாக, நீரிலிருந்து கால்களபிரைச்சல் ஏதும் எழுப்பாமல் வெளியே எடுத்து, நீரை அசைக்காமல் மீண்டும் கால்களை உள்ளே வைக்கும்.மொலியெழுப்பாமல் இரைதேடும் பண்பு கொண்டது இப்பறவை. அகநானூற்றில் - மருத நிலப் பாடலில் பரணர், 276 ஆவது செய்யுளில் சாம்பல் கொக்கின் இரை தேடும் பண்புக்கு ஒப்பாக இரவில் திருட வீட்டுக்குள் நுழையும் திருடனின் நகர்தலை குறிப்பிட்டுள்ளார்.
“நீளிரும் பொய்கை இரை வேட்டெழந்த

வாளை வெண்போத்து அனய, நாரை தன்

அடியநி வறுதலஞ்சிப் பயப்பய

கடியிலன் புகூம் கள்வன் போல”

மேற்கோள்கள்[தொகு]

  1. Harper, Douglas. "ornithology". Online Etymology Dictionary.
  2. [1]
  3. தியோடார் பாஸ்கரன் - உயிர்மையில்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. புறநானூறு தெளிவுரை – புலியூர் கேசிகன்.‘பாரி நிலையம் வெளியீடு
  5. அகநானூறு தெளிவுரை – புலியூர் கேசிகன் – ‘பாரி நிலையம் வெளியீடு ‘நாராய்! நாராய்! – அழவள்ளியப்பன் “அறிவியல் வெளியீடு”