ஏ. பழனிசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஏ. பழனிச்சாமி
பிறப்பு 1932
கல்லம்பட்டி.மதுரை தமிழ்நாடு
இறப்பு 12 நவம்பா் 2007 (வயது74)
பணி கைப்பந்து வீரா்

ஏ. பழனிசாமி (A. Palanisamy) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கைப்பந்து வீரர் ஆவார். இவர்  60களில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்  மூலம் நாட்டுக்காக விளையாட்டினார்.   இவா் தமிழ்நாட்டின், மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

ஜகார்தாவில் நடைபெற்ற 1962 ஆசிய விளையாட்டுகளில் அவரது கடுமையான விளையாட்டின் காரணமாக அவர் பிளாக் பாந்தர் என பெயர் பெற்றார். 1962 ஆம் ஆண்டில் ஆசியாவின் முதல் நிலை வீரராக அவர் பெயர் பெற்றார். 1961 ஆம் ஆண்டில் இவர் அர்ஜுணா விருது பெற்றார். கைப்பந்து வீரர்களில் அர்ஜுனா விருது பெற்ற முதல் வீரர் இவர் ஆவார். 1998 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுவதற்கு முன்பு அவர் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தின் பயிற்சியாளராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._பழனிசாமி&oldid=3312682" இலிருந்து மீள்விக்கப்பட்டது