பாண்டி ஆட்டம் (விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

‘’’பாண்டி ஆட்டம்’’’ என்பது சிறுமியர் விளையாடும், ஒரு விளையாட்டு. இதில் பல கட்டங்கள் உண்டு. அக்கட்டங்களில், சிறுமியர் ஆடுவர். கண்களை மூடி, இரு கால்களையும் பரப்பி, கட்டங்களில், தாண்டித் தாண்டி குதித்து, சரியாக, கால்களைக் கட்டங்களுக்குள் வைக்க வேண்டும்; கோட்டில், காலை வைத்து விட்டால், வெளியேறி விட வேண்டும். ஒவ்வொரு முறை, தாண்டி காலூன்றிய பின், 'ரைட்டா...' என்று, மற்றவர்களிடம் கேட்க வேண்டும். 'ரைட்டு...' என்று பதில் வந்தால் தான், ஆட்டத்தை தொடர முடியும். தமிழகத்தின் மரபான விளையாட்டுகள், ஒவ்வொன்றாக மறக்கப்பட்டு வருகின்றன; அவற்றுள், பாண்டி ஆட்டமும் ஒன்று.

பகுப்பு;தமிழர் விளையாட்டுகள்