வாசிரெட்டி சீதாதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாசிரெட்டி சீதாதேவி (Vasireddy Seethadevi, டிசம்பர் 15, 1933 - ஏப்ரல் 13, 2007) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கு எழுத்தாளர் ஆவார்.[1][2]

இவர் கிட்டத்தட்ட நாற்பத்தி இரண்டு நாவல்கள், பத்து சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். அவரது நாவல் மாறிசிக (Mareechika)வை ஆந்திரப் பிரதேச அரசு தடை செய்தது. அவர் நீதிமன்றத்தில்ல் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு யுத்தத்தை முன்னெடுத்து, பின்னர் அவரது புத்தகத்தையும் வெளியிட்டார். மட்டி மனுஷி அவரது சிறந்த நாவல்களுள் ஒன்றாகும். அது தேசிய புத்தக அறக்கட்டளை வாயிலாய் பதினான்கு இந்திய மொழிகளிலும் வெளிநாட்டு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல பல்கலைக்கழகங்களால் அவருக்கு கெளரவ டாக்டரேட் பட்டம் வழங்கப்பட்டது. அவரது நாவல்கள் பெரும்பான்மையான படங்களாக தயாரிக்கப்பட்டன. சீதாதேவி ஆந்திரப் பிரதேசம் சாகித்திய அகாதமி விருதினை (இலக்கிய விருது) ஐந்து முறை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஜவஹர் பால பவன் எனும் குழந்தைகளுக்கான ஒரு அரசு நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றினார். அவர் 1985 மற்றும் 1991 இடையே திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராகவும் இருந்தார்

படைப்புகள்[தொகு]

  • சமதா (1997)
  • மட்டி மனுஷி (2000)
  • உரி திராடு (2003)
  • அடவி மல்லெ (2003)
  • வென்னல மண்டு தோந்தி (2003)
  • மரோ தய்யம் கத (2003)
  • கோதி கோபாறீகாய்யா
  • ராபந்துலு ராமசிலகலு (2003)
  • மிருகத்ருஷ்ண
  • ஊர்மிள (2004)
  • தொணிகின ஸ்வப்னம் (2004)
  • மள்ளீ தெல்லவாரிந்தி (2004)
  • பொம்மரில்லு (2004)
  • நிங்கி நுண்டி நேலகு (2006)
  • ஹஸீனா (2006)
  • பந்திதுடு (2006)
  • ப்ரதீகாரம் (2006)

குறிப்புகள்[தொகு]

  1. "The Hindu : Andhra Pradesh / Hyderabad News : Vasireddy Sita Devi dead". Archived from the original on 2013-09-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-08.
  2. "The Hindu : Andhra Pradesh News : Vasireddy Sita Devi feted". Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2017-07-08.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசிரெட்டி_சீதாதேவி&oldid=3571139" இலிருந்து மீள்விக்கப்பட்டது