இயற்கை பெட்ரோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்கை பெட்ரோல் (Natural gasoline) என்பது இயற்கை வாயுவிலிருந்து ஒடுங்கப்பட்ட திரவ நீரகக்கரிமக் கலவையாகும். இது பாறை எண்ணெயிலிருந்து பெறப்படும் பொதுவான பெட்ரோல் போன்றதாகும்.

இயற்கை பெட்ரோலின் வேதியியல் கலவையானது, ஐந்து மற்றும் ஆறு கார்பன் ஆல்க்கேன்கள் (பென்ட்டேன் மற்றும் எக்சேன்) ஆகும்.[1] இதனுடன் நீண்ட சங்கிலிகளுடன் சிறிய அளவிலான அல்கான்களும் உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அளவு ஐசோபென்டேன் (மெத்தில் பியூட்டேன்) CH(CH
3
)
2
(C
2
H
5
)
, உள்ளது, இது பெட்ரோலிய உற்பத்தியில் அரிதானதாகும்.[2][3] இதன் கொதிநிலை பெட்ரோலுக்கான நிலையான வரம்பிற்குள் உள்ளது.

இயற்கை பெட்ரோல் கொந்தளிப்பு மற்றும் நிலையற்ற தன்மைகளைக் கொண்டதாகும்.மேலும், குறைந்த எட்டக எண் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, ஆனால், வணிக பெட்ரோலை உற்பத்தி செய்ய மற்ற ஹைட்ரோகார்பன்களுடன் கலக்கப்படலாம். [4] இது எண்ணெய் மென்களிக்கலில் இருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்க ஒரு கரைப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது. [4] அதன் பண்புகள் ஜிபிஏ மிட்ஸ்ட்ரீம் (எரிவாயு செயலிகள் சங்கம்) மூலம் தரப்படுத்தப்பட்டுள்ளன. [5]

சான்றுகள்[தொகு]

  1. Sheng Wang, Ying Zhang, Mao-Gang He, Xiong Zheng, and Li-Bin Chen (2014): "Thermal Diffusivity and Speed of Sound of Saturated Pentane from Light Scattering". International Journal of Thermophysics, volume 35, pages 1450–1464. எஆசு:10.1007/s10765-014-1718-x. Quote: "ethane 2.4% w/w, butane 1.3%, pentane 67.1%, hexane 22.0%, heptane 5.7%, and octane 1.5 %".
  2. Ivan F. Avery, L. V. Harvey (1958): Natural-gasoline and Cycling Plants in the United States, Information circular, U.S. Department of the Interior, Bureau of Mines. 12 pages.
  3. "EIA Glossary". பார்க்கப்பட்ட நாள் 2012-07-26.
  4. 4.0 4.1 Targray Corp (2020): "Natural Gasoline". Product webpage, accessed on 2020-04-07.
  5. GPA Midstream website. Accessed on 2020-04-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கை_பெட்ரோல்&oldid=3700946" இலிருந்து மீள்விக்கப்பட்டது