பெஞ்ச் தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 21°40′17.76″N 79°18′11.88″E / 21.6716000°N 79.3033000°E / 21.6716000; 79.3033000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெஞ்ச் தேசியப் பூங்கா
இந்திரா பிரியதர்ஷினி தேசியப் பூங்கா
Map showing the location of பெஞ்ச் தேசியப் பூங்கா
Map showing the location of பெஞ்ச் தேசியப் பூங்கா
அமைவிடம்மத்தியப் பிரதேசம், இந்தியா
அருகாமை நகரம்சியோனி
ஆள்கூறுகள்21°40′17.76″N 79°18′11.88″E / 21.6716000°N 79.3033000°E / 21.6716000; 79.3033000
பரப்பளவு257.26 km2 (99.33 sq mi)[1]
நிறுவப்பட்டது1975
நிருவாக அமைப்புமாநில வனத்துறை
வலைத்தளம்penchtiger.co.in

பெஞ்ச் தேசியப் பூங்கா சியோனி மாவட்டத்தில் 1975 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.[2] இப்பூங்கா 257.26 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது.[1] அண்மை நகரம் சியோனி, பூங்காவிலிருந்து 50 கி.மீ. தூரத்திலுள்ளது. இதன் வானூர்தி நிலையமாகவும், தொடருந்து நிலையமாகவும் நாக்பூர் இருக்கிறது. பூங்காவைப் பார்ப்பதற்கு மார்ச்சிலிருந்து ஜூன் வரை பொருத்தமான காலம் ஆகும். இங்கு ஒய்வில்லங்கள் ஐந்து உள்ளன.[3]

பெஞ்ச் பூங்காவில் காணப்படும் பெண்புலி

இப்பூங்காவில் வறண்ட இலையுதிர்காடுகளும் புலிகளும் பல்வகையான மான்களும் பறவைகளும் உள்ளன.[4] இங்கு வேங்கை, சோம்பற்கரடி, சாம்பர், கவரிமான், சீதல், குரைக்கும் மான், நாற்கொம்பன், காட்டுநாய், வராகம் முதலிய விலங்குகள் காணப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை 44 இல் பௌனியிலிருந்து இப்பூங்காவைச் சென்றடையலாம். இப்பூங்காவிற்கு துரியா, கர்மஜ்கிரி என்ற இரு நுழைவாயிற்கள் உள்ளன.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 World Database on Protected Areas (2019). "Pench National Park". Protected Planet.
  2. "Penchtiger.co.in".
  3. இந்தியாவின் தேசிய பூங்காக்கள், ஆர். எஸ். பிஷ்ட்
  4. "Birds of Pench". www.inditales.com. 22 August 2016. பார்க்கப்பட்ட நாள் 5 March 2019.
  5. "Experiences at Pench national park – a blog". www.imvoyager.com. 15 October 2018. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.

வெளிமாவட்டங்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pench National Park
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஞ்ச்_தேசியப்_பூங்கா&oldid=3918399" இலிருந்து மீள்விக்கப்பட்டது