ஆரத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கையாற்றின் கரையில் அதிகாலை நேரத்தில் கோயில் மணியுடன் கூடிய ஆரத்தி எடுக்கும் காட்சி
கோவிலில் கொத்து விளக்கில் எண்ணெய் விளக்கில் ஆரத்தி எடுக்கும் காட்சி
ஆரத்தி தட்டு

ஆரத்தி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தீபங்களை ஏற்றி வழிபடும் இந்து சமயத்திலுள்ள தெய்வ வழிபாட்டின் முறையாகும். இவ்வாறு வழிபடும் போது பாடப்படும் பாடல்கள் ஆரத்திப் பாடல்கள் எனப்படுகின்றன.

மூலம்[தொகு]

'ஆர்தி' என்கிற ஆங்கில வார்த்தை 'ஆரத்தி' என்கிற தமிழ்ச் சொல்லிருந்து வந்தது.ஆரம் + தீ = ஆரத்தி, ஆரம் என்பது வட்டவடிவமான மற்றும் தீ என்பது இங்கு ஒளி என்னும் பொருளில் வருகிறது.[1][2][3] சமஸ்கிருதத்தில் 'ஆரத்திக்யம்'(Sanskrit: आरार्तिक्यं) என்கிற சொல் ஆரத்தியைக் குறிக்கின்றது. மேலும் இது 'மகாநீராஞ்சனா' எனவும் அழைக்கப்படுகின்றது.

ஆரத்தி எடுக்கும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே பின்பற்றிவரும் 'வேள்வி' செய்யும் முறையிலிருந்து வந்தது. பாரம்பரிய முறைப்படி, ஆரத்தி எடுக்கும்பொழுது பூக்கள், நெய் அல்லது எண்ணெய் ஊற்றிய விளக்குகளை பயன்படுத்துவர். இவை முறையே பூமி, வெப்பம், நீர், காற்று, மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களை குறிக்கிறது. தூப மற்றும் தீப ஆரத்தி வழிபாடு மூலம் நமது புலன்களை எல்லாம் முன்னிருத்தி இறைவனின் அருளைப் பெறலாம்.[4]

செய்முறை[தொகு]

பூஜை அல்லது பஜனை முடியும் போது ஒன்று முதல் 5 முறை வரை ஆரத்தி எடுப்பார்கள். ஆரத்தி தட்டில் விளக்கு இருக்கும். ஆரத்தி எடுக்கும் போது தனி நபரையோ அல்லது தெய்வங்களைப் பற்றிய பாடல்களைப் பாடுவார்கள். இதில் பல முறைகள் இருந்தாலும் அனைத்திலுமே ஆரத்தி தட்டில் உள்ள விளக்குச்சுடர் என்பது தெய்வ சக்தியைக் குறிக்கிறது. கோவிலில் உள்ள தெய்வத்திற்கு ஆரத்தி எடுத்த பின்பு பூசாரி அதை வெளியில் உள்ள அனைவருக்கும் காண்பிப்பார். அவர்கள் தம் கைகளால் தொட்டு கும்பிடும் பொழுது தெய்வ அருள் கிடைக்கிறது என நம்பப்படுகிறது.

வெள்ளி, பித்தளை மற்றும் தாமிரம் போன்ற உலோகங்களில் ஆரத்தி தட்டு செய்யப்படுகிறது. இதில் பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு அல்லது மண் அல்லது உலோகத்தால் ஆன விளக்கை வைப்பார்கள். அந்த விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றுவர். பஞ்சு அல்லது பருத்தியிலான திரியினை (ஒற்றைப்படையில்) வைத்து விளக்கு ஏற்றுவார்கள். சிலசமயம் கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதில் பூக்கள், வாசனை ஊதுவத்தி மற்றும் 'அட்சதை' இருக்கும்.[5] சில கோவில்களில், பூசாரிகள் ஆரத்தி தட்டுக்கு பதிலாக நெய் தீபம் உபயோகிக்கிறார்கள்.

ஆரத்தி ஒளியில் இறைவனைக் காணும் பக்தர்கள் மனம் நெகிழ்ந்து நன்றி மற்றும் இறையுணர்வில் திளைக்கின்றனர். இது நீர்,நிலம்,வாயு,ஆகாயம்,நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களைக் குறிக்கிறது. சில கோவில்களில் அந்தந்த சமூகத்திற்கு ஏற்ப ஆரத்தி எடுக்கப்படுகிறது. வீடுகளில் பூஜையின் போதும் ஆரத்தி எடுப்பார்கள்.

வீடுகளில் ஆரத்தி[தொகு]

விஞ்ஞானமும் நவீன வாதமும், முற்போக்கு வாதமும் எல்லாம் நம் சமூகத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்தியிருந்த போதிலும் சில நம்பிக்கைகள் இன்றும் தவிர்க்க முடியாதவையாக நீடித்து நிற்கின்றன. இதில் ஒன்றுதான் ஆரத்தி எடுத்தல். தூரத்துப் பயணங்கள் முடித்து வரும் குடும்பத்தினர் திருமணம் முடிந்து வரும் மணமகன், மகப்பேறு முடிந்து வரும் தாய் போன்றோருக்கும் பொதுவாக ஆரத்தி எடுப்பதுண்டு. தண்ணீரில் மஞ்கள் அரைத்துச் சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்க்கப்படும். அப்போது மஞ்களுடன் சேர்ந்து சுண்ணாம்பு சிவ்ப்பு நிறமாக மாறும். இதனை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு சூடங்கள் மூலம் தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலை முழுமையாக மூன்று சுற்று சுற்றி அதனை தெருவில் ஊற்றுவர். மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறன் உண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் நோக்கம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. आरात्रिक Sanskrit English Dictionary, Germany
  2. James Lochtefeld, An illustrated Encyclopedia of Hinduism, ISBN 0-8239-2287-1, page 51
  3. Monier Williams Sanskrit Dictionary; Quote: ArAtrika n. the light (or the vessel containing it) which is waved at night before an icon ; N. of this ceremony.
  4. Rosen, Steven (2006). Essential Hinduism. Praeger Publishers. ISBN 0-275-99006-0
  5. Akshata: (Sanskrit) "Unbroken." Unmilled, uncooked rice, often mixed with turmeric, offered as a sacred substance during puja, or in blessings for individuals at weddings and other ceremonies. This, the very best food, is the finest offering a devotee can give to God or a wife can give to her husband.

உசாத்துணை[தொகு]

நூல் ஓலைச்சுவடி ஆசிரியர் முனைவர் வெங்கானூர் பாலகிருஷ்ணன், தமிழாக்கம் ரஞசன் சுவாமிதாஸ் பதிப்பகம் அடோன் பப்ளிஷிங் குருப் பதிப்பு 2014

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரத்தி&oldid=3729022" இலிருந்து மீள்விக்கப்பட்டது