பஞ்சப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சப்பள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636812

பஞ்சப்பள்ளி (Panjapalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636812.[1] இது பஞ்சப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது. இந்த ஊரில்தான் பஞ்சப்பள்ளி அணை கட்டபட்டுள்ளது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவிலும்[2] மாரண்டஹள்ளியில் இருந்து 11 கி.மீ. தொலைவிலும் அய்யனார்கோட்டையில் இருந்து 18 கி.மீ தூரத்திலும் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°27'41.2"N 77°56'33.1"E [3] ஆகும்.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரின் மொத்த குடியிருப்புகள் 1578, மொத்த மக்கள் தொகைகள் 6680 ஆகும்.[4]. இதில் 3452 ஆண்களும்,3228 பெண்களும் அடங்குவர்.

ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Panjapalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-25.
  3. :https://www.google.co.in/maps/place/12%C2%B027'41.2%22N+77%C2%B056'33.1%22E/@12.461445,77.9419683,191m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.461445!4d77.942532?hl=en
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சப்பள்ளி&oldid=3694095" இலிருந்து மீள்விக்கப்பட்டது