கோள் காற்றுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோள் காற்றானது பூமியின் வளிமண்டல சுழற்சியின் ஒரு பகுதியாகும்.

கோள் காற்றுகள் என்பது ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்று ஆகும். கோள் காற்றுகளில் முதன்மையானது வியாபாரக் காற்றுகள் (Trade Winds) ஆகும் இவை அயன மண்டலங்களுக்கு இடையே வீசுகின்றன. இவை வட கோளத்தில் வட கிழக்கு வியாபாரக் காற்றுகளாகவும் மற்றும் தென் கோளத்தில் தென்கிழக்கு வியாபாரக் காற்றுகளாகவும் வீசுகின்றன. வரலாற்றுக் காலங்களில் கடற்பயணம் மேற்கொள்பவர்களுக்கு இவை மிகவும் பயனுள்ளதாக இருந்ததால் அவ்வாறு அழைக்கப்பட்டது. இவ்வகையான காற்றுகள் சீரானதாக மற்றும் நிலையானதாகவும் குறிப்பாகக் கடற்பரப்பில் வீசக்கூடியது. ஃபெரல் விதியின் படி இவ்வகையான காற்றானது விலகி வீசுகிறது.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை, பதிப்பு 2017, ஏழாம் வகுப்பு, பருவம் 2, தொகுதி 2, பக்கம் 174
  2. URS (2008). Section 3.2 Climate conditions (in Spanish). Estudio de Impacto Ambiental Subterráneo de Gas Natural Castor. Retrieved on 2009-04-26.
  3. Glossary of Meteorology (2009). Wind rose. பரணிடப்பட்டது 2012-03-15 at the வந்தவழி இயந்திரம் American Meteorological Society. Retrieved on 2009-04-25.
  4. Jan Curtis (2007). Wind Rose Data. Natural Resources Conservation Service. Retrieved on 2009-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோள்_காற்றுகள்&oldid=3893963" இலிருந்து மீள்விக்கப்பட்டது