நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெல் இனப்பெருக்க நிலையம் என்பது தமிழ்நாட்டின் கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் செயல்பட்டுவரும் ஒரு நெல் ஆராய்ச்சி நிலையமாகும்.

இந்த நெல் ஆராய்ச்சி நிலையமானது 1912 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் மிகவும் பழமையான நெல் ஆராய்ச்சி நிலையம் ஆகும். இம்மையம், ஆங்கிலேய விஞ்ஞானிகளான எப். ஆர். பர்நெல், பி.ஓ.லிபீ, டாக்டர். கே. ராமைய்யா ஆகியவர்களின் தலைமையில் செயல்பட்டு, நெல் வரலாற்றில் பல பதிவுகளைப் பதித்தது ஆகும். இதன் வளாகத்தின் மொத்த பரப்பளவு 12.96 எக்டர். இந்நிலையமுள்ள பகுதியில் ஆண்டு சராசரி மழையாக 900 மி.மீ அளவு கொண்டு உள்ளது.

குறிக்கோள்கள்[தொகு]

  • வேறுபட்ட கால அளவு வகைகளுடைய அதிக மகசூல் ஈட்டும் இரகங்களை, உள் கட்டுப்பாட்டு வழி மூலம் உருவாக்குதல்.
  • அனைத்து இந்திய ஒருங்கிணைப்பு நெல் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் நெல் ஆராய்ச்சி இயக்ககம், ஹைதராபாத் இதனுடன் ஒருங்கிணைந்த நெல் ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல்.
  • பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிலையம், பிலிப்பைன்ஸ் மற்றும் நெல் ஆராய்ச்சி இயக்ககத்துடன் (கூட்டு) ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மேற்கொள்வது.
  • தேசிய மற்றும் பன்னாட்டு வலையமைவு திட்டத்தின் மூலம் கலப்பின நெல் ஆராய்ச்சி.
  • புதிய வழிமுறைகளான அகன்ற பண்பகக் கலப்பு, மகரந்த வளர்ச்சி மற்றும் மூலக்கூற்று முறைகள் ஆகியவற்றின் மூலம் மரபியல் மேம்பாடு செய்யப்படுகிறது.
  • பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சியை செயல்படுத்துவது.
  • தொழில் நுட்பத்தை பரிமாறி, பயிற்சி நிகழ்ச்சிகளை செயல்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது,
  • செயல் விளக்கத்திடல்கள் மற்றும் கல்வி சுற்றுலா ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்து வேளாண் சமூகத்திற்கு நன்மைகளை ஏற்படுத்துகிறது.[1]

வெளியிட்ட இரகங்கள்[தொகு]

  • கோ 1
  • கோ 50
  • கோ ஆர் ஹச்- 1,2,3. (மற்றும் கலப்பு இன வகைகள்)

மேற்கோள்கள்[தொகு]