ஆதாம் செயற்கை நீரூற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Night time view of Adam's fountain
ஆதாமின் நீரூற்று இரவு நேரத் தோற்றம்

ஆதாமின் நீரூற்று (Adam's fountain) ஊட்டியிலுள்ள சேரிங் கிராசு பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஒரு செயற்கை நீரூற்று ஆகும். இந்நீரூற்று 1886 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த[1] ஊட்டி ஆளுநரின்[2] நினைவாகக் இந்நீரூற்று கட்டப்பட்டது. நீரூற்றின் மொத்த செலவுத் தொகை ரூ. 13,000 இலிருந்து ரூ. 14000 ஆகும். இத்தொகை அரசின் பொது நிதியுதவியிலிருந்து பெறப்பட்டது ஆகும்[3].

வரலாறு[தொகு]

Adam's fountain
ஆதாமின் நீரூற்று
Night time view of Adam's fountain
ஆதாமின் நீரூற்று இரவு நேரத் தோற்றம்

நீரூற்றை முதலில் ஊட்டி சந்தை அருகே நிறுவவே முடிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் வைப்பதே சரியாக இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது. நீரூற்று கட்டி முடிக்கப்பட்ட பின்னரே நீரூற்று ஒழுங்காகச் செயல்படப் போதுமான தண்ணீர் வசதி இல்லாதது கண்டறியப்பட்டது. இறுதியாக 1898 ம் ஆண்டு நீரூற்று தற்போது அமைந்துள்ள பகுதியான சேரிங் கிராசிற்கு மாற்றப்பட்டது. சேரிங் கிராசு பகுதியின் அடையாளமாக அங்கிருந்த மஞ்சள் நிறத்தில் பூக்கும் மெலனோசைலான் மரம் ஆடம்சு நீருற்று நிறுவப்படுவதற்காக அகற்றப்பட்டது.

சுற்றுலாத் தளம்[தொகு]

இந்த நீரூற்று ஊட்டியின் மிக முக்கியமான [4] மற்றும் அழகான இடத்தில் [5] ஒன்றில் அமைந்துள்ளதால் ஊட்டியின் ஒரு முக்கியமான சுற்றுலாத்தளமாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.[6]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Raj Bhavan". ootyhotels.org. Archived from the original on 5 பெப்பிரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 9 செப்டெம்பர் 2011.
  2. "World Travel Destinations - Adam's Fountain". traveldest.org. பார்க்கப்பட்ட நாள் 9 September 2011.
  3. "OOTY / UDHAGAI / UDHAGAMANDALAM / OOTACAMUND - ADAM'S FOUNTAIN". nilgiris.tn.gov.in. Archived from the original on 2011-01-14. பார்க்கப்பட்ட நாள் 9 September 2011.
  4. "NILGIRIS DISTRICT - EXTRACT OF RULE 4(1)(b) OF THE RIGHT TO INFORMATION ACT 2005.". tnpolice.gov.in. மூல முகவரியிலிருந்து 2011-08-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் Aug 11, 2011.
  5. Swaminathan, K.P. (Jul 14, 2008). "Nilgiris ruined" பரணிடப்பட்டது 2008-07-17 at the வந்தவழி இயந்திரம். The Hindu. http://www.hindu.com/2008/07/14/stories/2008071458170300.htm பரணிடப்பட்டது 2008-07-17 at the வந்தவழி இயந்திரம். பார்த்த நாள்: Aug 11, 2011.
     
  6. "The Hindu Images பரணிடப்பட்டது 2012-03-29 at the வந்தவழி இயந்திரம்". thehinduimages.com. பார்த்த நாள் Sep 9, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதாம்_செயற்கை_நீரூற்று&oldid=3586086" இலிருந்து மீள்விக்கப்பட்டது