ஹாரன் ஒலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹாரன் ஒலி என்பது மோட்டார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலி எழுப்பும் கருவியில் இருந்து வெளிப்படுத்தப்படும் ஒலி ஆகும்.

மனிதர்களால் கிட்டத்தட்ட 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண் உள்ள ஒலி அலையை கேட்க முடியும். இதில் குறைந்த அதிர்வெண் உள்ள ஒலியானது குறைந்த சுருதியும் அதிக அதிர்வெண் உள்ள ஒலியானது அதிக சுருதியும் கேட்கும். வாகனங்களில் ஒலி எழுப்பும் ஹார்ன் சத்தமானது, அதை கேட்பவா் ஒருவரையொருவர் நெருங்கும் போது ஒலியின் அதிர்வெண் V1 = V0 ( C+U)/ ( C-U ) என்று தோன்றும். இதில் C என்பது ஒலியின் வேகம், V என்பது உண்மையான அதிர்வெண். எனவே, நெருங்கி வரும்போது உச்சஸ்தாயில் ஒலி கேட்கும். இவை ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்லும்போது, ஒலியின் அதிர்வெண் V2=V0 (C-U)/ (C+U) என்று தோன்றும். அதனால் பேருந்து விலகிச் செல்லும்போது குறைந்த ஸ்தாயில் கேட்கும். இந்த விளைவுக்கு டாப்ளர் விளைவு என்று பெயா். ஹாரனும் கேட்பவரும் ஒரே வாகனத்திலிருந்தால் இரண்டும் ஒரே வேகத்தில் செல்வதால் ஒலியின் அதிர்வெண் V3= V0(C+U)/ (C+U) என்று மாற்றமில்லாமல் தோன்றும்.[1]

மேற்கோள்[தொகு]

  1. அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நுால் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரன்_ஒலி&oldid=3343226" இலிருந்து மீள்விக்கப்பட்டது