கூடுவாஞ்சேரி பேரூராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூடுவாஞ்சேரி பேரூராட்சி என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுக்காவில் அமைந்த ஒரு நகராட்சி. இது சென்னையில் தாம்பரத்திலிருந்து 10 கி.மீ. (6.2 மைல்), செங்கல்பட்டு இருந்து ஜி.எஸ்.டி ரோட்டில் 15 கி.மீ., வண்டலூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது சென்னை புறநகர் ரயில்வேயுடன் கூடுவாஞ்சேரி இரயில் நிலையம் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது.நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியானது செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)க்கும், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

நிலவியல்[தொகு]

சென்னை தேசிய நெடுஞ்சாலை 45, தெற்கு தமிழ்நாட்டின் நுழைவாயிலை இணைக்கும் வண்டலூர் தேசிய நெடுஞ்சாலை 45 இல் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது. கூடுவாஞ்சேரியில் தொடருந்து நிலையம் உள்ளது. இதன் கிழக்கே திருப்போரூர் 25 கிமீ; மேற்கில் ஸ்ரீபெரும்புதூர் 42 கிமீ; வடக்கில் பீர்க்கன்கரணை 5 கிமீ; தெற்கில் மறைமலைநகர் 4 கிமீ தொலைவில் உள்ளது.ஆதனூர், மாடம்பாக்கம், நீலமங்கலம், பல்லஞ்சேரி, காவனூர், கன்னிவாக்கம், பாண்டூர், காரனைப்புதுச்சேரி பொத்தேரி, தைலாவரம், திருப்போரூர் மற்றும் வல்லான்சேரி ஆகிய பகுதிகளின் மைய இடமாக கூடுவாஞ்சேரி இருக்கின்றது. கூடுவாஞ்சேரியின் கிழக்கே கோவிந்தராஜபுரம், விஷ்ணுப்பிரியா நகர், பெருமாட்டு நல்லூர், காமேஸ்வரி நகர், காயாரம்பேடு மற்றும் நெல்லிக்குப்பம் ஆகியவை உள்ளன. இதன் கிழக்கே திருப்போரூர் 25 கிமீ; மேற்கில் ஸ்ரீபெரும்புதூர் 42 கிமீ; வடக்கில் பீர்க்கன்கரணை 5 கிமீ; தெற்கில் மறைமலைநகர் 4 கிமீ தொலைவில் உள்ளது.கூடுவாஞ்சேரியின் மேற்கே ஆதனூர், மாடம்பாக்கம், நீலமங்கலம், பல்லஞ்சேரி மற்றும் ஒரத்தூர் ஆகிய பகுதிகள் காணப்படுகின்றன. திருப்போரூரில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் இநந்த் தேசிய நெடுஞ்சாலை முடிவடைகிறது. இது தென்பெரும் நெடுஞ்சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, கடற்கரை தடவழியுடன் இணைகிறது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

8.50 சகிமீ பரப்பும், 158 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 312 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 11,252 வீடுகளும், 44,098 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 91.13% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 981 பெண்கள் வீதம் உள்ளனர். ஆதாரங்கள்

வசதிகள்[தொகு]

இங்கு எஸ். ஆர். எம். பல்கலைக்கழகமும் அந்நிறுவனக் குழுமங்களான வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரி, எஸ்ஆர்எம் மேலாண்மைப் பள்ளி, எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி, எஸ்ஆர்எம் மருத்துவமனை, வள்ளியம்மை பல்தொழில்நுட்பக் கல்லூரி, எஸ்ஆர்எம் பல்தொழில்நுட்பக் கல்லூரி, எஸ்ஆர்எம் உணவக ம்மேலாண்மை நிருவனம், எஸ்ஆர்எம் கலை, அறிவியல், எஸ்ஆர்எம் மருந்தகம் ஆகியவை கூடுவாஞ்சேரியிலிருந்து 2 கிலோமீட்டர் (1.2 மைல்) தொலைவில் அமைந்துள்ளன.இதனைச் சுற்றி தொழிற்துறை நிறுவனங்களான அக்சென்சர்(Accenture), மகிந்திரா சிட்டி (Mahindra World City), போர்டு (Ford) ஆகிய குழுமங்களும் அமைந்துள்ளன.

விளக்கப்படங்கள்[தொகு]

2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கூடுவாஞ்சேரியின் மக்கள்தொகை 26,575 ஆக இருந்தது; இங்கு பெரும்பாலானவர்கள் தமிழ் பேசுகின்றனர், ஆனால் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி பேசும் மக்களும் உள்ளனர். இங்கு எஸ்.ஆர்.எம் நிறுவனங்களின் மாணவர்கள், வட இந்தியாவிலிருந்து வந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள ஐ.டி மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் பணிபுரியும் மக்களும் வசித்து வருகின்றனர் .

வழிபாட்டு இடங்கள்[தொகு]

கூடுவாஞ்சேரியில் 20 க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயில் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிங்க பெருமாள் கோயிலில் அமைந்துள்ள பாடலாத்திரி கோயில், செட்டிபுன்னியம் கிராமத்தில் உள்ள யோக ஹயக்ரீவர் கோவில் ஆகியவை விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உள்ளூர் வழிபாட்டுத் தலங்கள் ஆகும். மேலும் ஸ்ரீ தேவி திருவேதி அம்மன் கோயில், ஸ்ரீ லக்ஷ்மி நாராயண கோயில், மாமரத்து பிள்ளையார் கோயில், ஸ்ரீ நீதி விநாயகர் கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், முத்துமரியம்மன் கோயில், புதுப்பாளையத்து அம்மன் கோயில், கமலவிநாயகர் கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்களும் காணப்படுகின்றன.

இங்கு 1992இல் ஸ்டான்லி பாலன் என்பவரால் நிறுவப்பட்ட தேவசாயல் திருச்சபை உள்ளது. சி .எஸ் .ஐ .தூய அந்தோனியார் திருச்சபை, நல்மேய்ப்பர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை, பல இஸ்லாமிய மசூதிகளும் இந்த நகரத்தில் உள்ளன. உலகச் சமூகச் சேவை மையம் (WCSC, உலக அமைதிக்கான ஒரு இயக்கம்) நிறுவிய வேதாத்திரி மகரிசி, 1911 இல் நந்திவரம், கூடுவாஞ்சேரியில் பிறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

4. நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியின் இணையதளம்

5. Nandivaram - Guduvancheri Population Census 2011